தமிழன் என்று சொல்லடா!!! தலையில் அடித்து கொள்ளடா!!!!
>> Tuesday, 13 April 2010
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று திருட்டுத்தனமாய் மட்டும் தான் தற்சமயம் தமிழகத்தில் சொல்ல முடியும். அந்த அளவிற்கு ஹிட்லர் காலத்தில் இல்லாத கெடுபிடி எல்லாம் மக்கள் மீதும், ஊடகங்கள் மீதும் மிக நயமாய், அன்பாய், பாசத்தோடு சுமத்தப் பட்டு இருக்கிறது. எதிர்த்து கேட்க இருப்பது இரண்டே இரண்டு ஊடகங்கள் தான். ஒன்று ஜெயா தொலைக்காட்சி அதை 5% மக்கள் கூட பார்ப்பதில்லை. இன்னொன்று துக்ளக் பத்திரிக்கை, ஆனா அதோட சர்க்குலேஷன் மற்றும் டிஸ்டிரிபியுசன் மிக குறைவு என்பதால் ஏதோ சோ ரசிகர் மன்ற பத்திரிக்கை போல வருகின்றது.
தமிழ் புத்தாண்டுதான் இல்லை என்று ஆகி விட்டதா??. ஆனால் ஊடகங்கள் என்ன செய்கின்றன???.
விஜய் தொலைக்காட்சி, தினத்தந்தி, மாலை மலர் போன்ற ஊடகங்களில் "சித்திரை திருநாள்" சிறப்பு நிகழ்ச்சிகள்...
கலைஞர் தொலைக்காட்சியில் "அம்பேத்கார் பிறந்த நாள்" சிறப்பு நிகழ்ச்சிகள்..
ஜெயா தொலைக்காட்சியில் வழக்கம் போல் "தமிழ் புத்தாண்டு" சிறப்பு நிகழ்ச்சிகள் தான்... (ஏட்டிக்கு போட்டியாச்சே!!)
சன் தொலைக்காட்சி இதுலயும் ரொம்ப பெஸ்ட்.. "தொடக்க நாள்" சிறப்பு நிகழ்ச்சிகள்...
அட்றா சக்கை!!! அட்றா சக்கை!!! ஆக கல்லா கட்டுறதுல மட்டும் எல்லாரும் ஒத்துமையா இருக்காங்க.. தமிழ் புத்தாண்டு சித்திரையில் பிறக்கவில்லை என்றால், எதற்காக அரசாங்க விடுமுறை? எதற்காக சிறப்பு நிகழ்ச்சிகள். ஒரு சாதாரண மாசி-1, பங்குனி-1 தினத்திற்கு தரும் சிறப்பை தந்தால் போதாதா?.. ஏன்???
நீதி மன்றத்தில் இந்த அரசாணையை எதிர்த்து பொதுநல வழக்கு நடந்த போது, அரசு வழக்கறிஞர் என்ன சொல்லி தப்பித்து கொண்டார்?. இது தமிழக அரசு தன்னோட அலுவலகங்களுக்கு மட்டும் பயன்படுத்த கூடிய அரசு நாள்காட்டி(காலண்டர்) மாற்றம், இதை மக்கள் மீது திணிக்கவில்லை என்று கூறி தமிழக அரசு தப்பித்து கொண்டது. ஆஹா!!! முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அபார வாதம். இரண்டு வருடம் ஆகி விட்டது, சிந்தித்து பாருங்கள்...ஏதாவது ஒரு அரசாணையாவது "அரசாங்கம் பயன்படுத்தும் நாள்காட்டியின் படி" என்று வருகின்றதா?. நடப்பதென்னவோ, ஊடகங்கள் வழியாக மக்கள் மீது திணிப்பு தானே??.
எனக்கு இதுல தீராத சந்தேகம் என்னவென்றால்.."விக்ருதி", "விரோதி" என்று ஆண்டு பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கிறதே!!.. அப்படியே தமிழுக்கு நல்லது செய்யும் எண்ணமிருக்கும் அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்?. இந்த ஆண்டுகளுக்கு பழங்காலங்களில் என்ன பெயர் வைத்து அழைத்தார்களோ, அதை தோண்டி எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தால், கொஞ்சமாச்சும் அர்த்தம் இருந்திருக்கும்.
இவிய்ங்க பண்ணுறதே வெட்டி வேலை, இதுல சித்திரைல இருந்து புத்தாண்டை புடுங்கி, "தை" க்கு மாத்துனா தமிழ் நாடு வாழ்ந்துறுமோ??? ஐயா நீங்க எந்தா ஆணியும் புடுங்க வேண்டாம்!!!. (நல்லவேளை புத்தாண்டு "ஆனி"ல பொறக்கல,, நம்ம கடலை உளுந்தம் பருப்புகள் மன்னிச்சுருங்கப்பா "டங்" சிலிப் ஆயிடுச்சு கழக உடன்பிறப்புகள் "ஆணி புடுங்கி ஐயா!!"னு சொல்லி கழக வித்துவானுக ரஜினி, கமலை வச்சு ஒரு பாராட்டுவிழா எடுத்துருப்பானுக.)
தமிழ் புத்தாண்டை சித்திரையில் இருந்து "தை"க்கு மாற்றினால் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் நீடுழி வாழ்ந்திடுமோ??. நம்ம தமிழர் பண்பாடு தான் "மானாட மயிலாட" வழியே எட்டு தெசைக்கும் பரவியிருக்கே!! அப்புறம் எதுக்குய்யா இந்த வீணாப் போன வேலை??.
அடுத்த வருடத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையும் "தை" மாதத்திற்கு மாற்றலாம் என்று திட்டம் போட்டு இருந்தார்கள்... ஆனால் கேரளா அரசாங்கம் அணை கட்டியதும் வைகையில் எப்படியும் தண்ணீர் இருக்க போவதில்ல(இப்ப மட்டும் என்ன வாழுதாம்?)!!!, மணலையும் ஒரு வழியா சொகபோகமா கொள்ளையடிச்சு முடிச்சாச்சு!!! இனி ஒரு மொன்ன நாயும் ஆத்து பக்கம் போறதுக்கு வழி இல்ல... இனி என்ன??? மொத்தமாய் சித்திரை திருநாள் தானாக ஒழிந்து விடும் தானே?? ஹா!!!! ஹா!!!!!!
தமிழன் என்று சொல்லடா!!! தலையில் அடித்து கொள்ளடா!!!! (ஏன்னா அரசாங்கம் தான் தெனமும் வயித்துல அடிக்குதே அதுனால தலையில மட்டும் அடிச்சுக்கலாம்)
-நன்றி அயனாவரம் கஜாமணி
மானமுள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டை சித்திரை திங்களில் மட்டும் தான் கொண்டாட வேண்டும்....
மானமுள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டை சித்திரை திங்களில் மட்டும் தான் கொண்டாட வேண்டும்....
உங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
10 comments:
எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடு உண்டு
வேலு!!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!!
மானம் உங்களுக்கு என்ன குத்தகை எழுதி வைச்சு இருக்கா?
அவன் அவன் விருப்பப்பட்டத செஞ்சு போறான்.
விடுவிங்களா!
@நாளும் நலமே விளையட்டும்,
நம்ம தமிழ் கலாச்சாரத்தைதான் நாம மானாட மயிலாடத்துக்கு குத்தகை விட்டாச்சே!!! அப்புறம் என்ன!!! அவனவன் விருப்ப பட்டதை பண்ணலாம்னா "படுக்கயறை" புகழ் நித்தியும் அவர் விருப்ப பட்டதை தானே பண்ணுனாரு. சன் டிவியும் அவங்க விருப்ப படி படுக்கயறை நிகழ்ச்சியை நம்ம வீட்டு வரவேற்பறையில் ஒளிபரப்புனாங்க...எதுக்கு ஒரு முறைனு ஒண்ணு இருக்கே!!!..
ஆனா உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.. உங்க கருத்துக்கும் மிக்க நன்றி!!!!
superbaaaaa!!!!
//எனக்கு இதுல தீராத சந்தேகம் என்னவென்றால்.."விக்ருதி", "விரோதி" என்று ஆண்டு பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கிறதே!!.. //
ஆம் உங்களைப்போல நிறையப்பேர் இப்படித்தான் உள்ளார்கள்.
"விக்ருதி", "விரோதி" "நாசமாயந்மக" 'சத்ரு" ..இந்தப் பெயர்கள் எல்லாம் நீங்கள் சொன்னது போல சம்ச்கிரதம்
இதற்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழ் ஆண்டு என்பது திருவள்ளுவர் ஆண்டு. அதற்கு இப்படி கேடுகெட்ட பெயர்கள் இல்லை. ஆங்கில வருடம் போல எண்களாலேயே குறிக்கப்படும்.
இதெல்லாம் படிங்க பாசு..
தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!
http://vasanthanin.blogspot.com/2008/02/blog-post.html
புத்தாண்டு வாழ்த்துக்கள் - கலைஞரின் ராஜதந்திரம்!
http://penathal.blogspot.com/2008/04/blog-post_13.html
பொங்கல்தான் புத்தாண்டா?
http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html
.
உங்களுக்கு என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
//"ஆணி புடுங்கி ஐயா!!"னு சொல்லி கழக வித்துவானுக ரஜினி, கமலை வச்சு ஒரு பாராட்டுவிழா எடுத்துருப்பானுக//
romba romba suppppperrrr
Post a Comment