தமிழக ஒபாமா!!!
>> Monday, 11 May 2009
ராமநாதபுரத்தை சார்ந்த வாக்காள குடிமக்களே!
ஒலக நாயகன்! தமிழக ஒபாமா! என்று பல பட்டங்களை சுமந்து வரும் அண்ணன் ஜே.கே.ரீத்தீஷ் உங்கள் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
ராமநாதபுரத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் "ஒலகநாயகன்" தனக்கு கிடைத்த கீழ்கண்ட பட்டங்களை கொண்டு போஸ்டர் யுத்தம் புரிகிறார்.
வருங்கால நிதியமைச்சர்..!
வருங்கால ஒலக ஜனாதிபதி
தமிழக விடிவெள்ளி!
அமெரிக்காவின் விடியாத வியாழன்..!
தேர்தல் சூறாவளி!
நடன சூறாவளி!
முகவையின் முத்து!
மு.க. வின் முகவரி
ராமநாதபுரத்து மின்னல்!
ராமநாதபுர மைக்கேல் ஜாக்ஸன்!
ஈடு இனையில்லா இடி..!
கலியுக வள்ளல்..!
கண்ணு மண்ணு தெரியா கர்ணன்!
வாழும் வள்ளல்!
சின்னப் பகவதி!
சீறி வரும் காளை!
புரட்சி புறா!
தன்னலமற்ற தலைவன்..!
தமிழக ஒபாமா!!!
மேலும் விபரங்களுக்கு http://www.jkritheesh.com/
அவர் தோல்வியின் விழும்பை தழுவினால், மீண்டும் தமிழ் நாட்டில் கலைச்சேவை செய்யபோவதாக வாக்கள பெருமக்களுக்கு மிரட்டல் தெரிவித்துள்ளார்!!!
நாயகன் படத்தில் "நிலா! நிலா! ஓடி வா!!" என்ற பாடலுக்கு நடனம் என்ற பெயரில் நாதாரி தனம் புரிந்தவர், தோல்வியை தழுவினால் தான் அடுத்து எடுக்கபோகும் "தளபதி" திரைப்படத்தில் "அம்மா! இங்கே வா!வா! ஆசை முத்தம் தா!தா!" என்ற பாடலுக்கு கொலைவெறியாட்டம் புரியபோவதாக அறிவித்துள்ளார்!!!
எனவே தயவு கூர்ந்து எப்பாடு பட்டாலும் அவரை தங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக்கி டெல்லிக்கு அனுப்பிவிடுங்கள்!!! இல்லையென்றால் நடிப்பு என்ற பெயரில் நடக்கபோகும் விபரீதங்களுக்கு கம்பெனி பொறுப்பாகாது...
2 comments:
கவித சூப்பர்னா...
மதுரை தமிழை பாராட்டிய நெல்லை தமிழை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்!!!
Post a Comment