பெருமைக்குரியவர்கள் ...

>> Friday, 22 May 2009

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் உண்டு. தனி மனிதனுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு இனத்திற்கும் கூட ஒரு குணம் உண்டு. உலகம் உருவான காலத்தில் இருந்து, பல கால கட்டங்களில், பல மனிதர்கள், பல காரணங்களுக்காக பெருமை வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்களில் சிலர் இங்கே!

மார்டின் லூதர் கிங்

அமெரிக்காவில், அமெரிக்கர்களால், ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்டு, தமது இனத்திற்காக, இனத்தின் உரிமைகளுக்காக, தனி மனித உரிமைகளுக்காக, அடிமைகள் என்ற வார்த்தையை அகராதியிலிருந்து அடியோடு அழிப்பதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்து, அரும்பாடு பட்டு, கொலையுண்டு மாண்ட ஒரு மாவீரர் இவர். இவரது செயல்களுக்காக, இவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு கூட அளிக்கப்பட்டது.

வின்ஸ்டன் சர்ச்சில்

இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்து, படித்து, இராணுவத்தில் பணியாற்றி, அரசியல் பணியாற்றி, 2 முறை இங்கிலாந்தின் பிரதமராகி, 1945 ல் ஜெர்மனிக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றவர். இங்கிலாந்தில் மட்டுமன்றி, உலகத்திலேயே இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒரே பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.
மகாத்மா காந்தி

தென்னாப்பிரிக்காவில் வாழும் சிறுபான்மை இந்தியர்களுக்காக போராடியவர், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர், இந்தியா என்றொரு நாடுண்டு என்பதை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர்.


எம். ஜி. ஆர்

ஏழை எளிய மக்களின் நலனுக்காக அக்கறை காட்டியவர். அள்ளிக் கொடுத்த வள்ளல், தமிழர்களின் கல்வி முறையை சீரமைத்து, ஏழை எளியவர்களும் கல்வி கற்க வழிவகை செய்தவர் என்ற பெருமைக்குரியவர்.


கலைஞர் கருணாநிதி

ஈழத்தில் போர் நிறுத்தம் வரவேண்டும், இல்லையென்றால் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் என்று சென்னையில் இருந்தபடியே மிறட்டல் நாடகம் நடத்தியவர். பின்பு, மத்திய அரசானது ஈழ மக்களுக்கு உதவி செய்ய முன் வந்ததால், ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்கின்றோம் என்று கூறியவர்.

உடல் நிலை காரணமாக, டெல்லி செல்ல இயலாமல், சென்னையில் இருந்துகொண்டே, தந்தியும், கடிதமும் எழுதி எமது இன மக்களின் துயர் துடைக்க பாடுபட்டவர்.

போர் நிறுத்தத்திற்காக உண்ணநிலையையும் எடுத்தவர்.

தற்போது, மகன் அழகிரிக்காகவும், மகள் கனிமொழிக்காகவும், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் டெல்லி சென்று அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு காங்கிரஸ் கட்சியை மிரட்டுபவர்.

அது கிடைக்கவில்லை என்றதும், வெளியில் இருந்து ஆதரவை அளிப்பதாக அறிவித்தவர்.

உலகமே தமிழனத்தின் தலைவர் என்று தம்மை கூறிக்கொண்டிருந்த வேளையில், தமது இனத்தின் அழிவிற்காக முழு ஆதரவை மத்திய அரசிற்கு வழங்கிய இவர், தமது குடும்பத்திற்கு பதவி கொடுக்கவில்லை என்பதற்காக, வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்துள்ளார்.

இதனால் இவர் உலகத்தமிழினத்தின் துரோகி என்ற பெருமைக்குரியவர்.


சார்லஸ் ஆண்டனி

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

http://jcet.blogspot.com/2007/09/arathuppal-illaraviyal-makkatperu-7.html

என்ற வள்ளுவ முனிவரின் வாக்குப்படி, தந்தைக்கும், தமது இனத்திற்கும் பெருமை சேர்த்தவன் இந்த பிள்ளை.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறுவது போல், நான் வளர்ந்துவிட்டேன், என்னுடைய இளைய வயது ஈன சுகங்கள்தான் முக்கியமென்று எண்ணாமல், எமது சகோதர, சகோதரிகளின் உரிமைகளுக்காக,
தானே முன்னின்று சமர் செய்து வீர சொர்க்கம் அடந்த இவன்தான் தமிழினத்தின் வீரப்பிள்ளை என்ற பெருமைக்குரியவன்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்

கதிரவன் பிறந்து, எழுந்து, உலகத்தை விழிக்கச் செய்கின்றான். அதேபோல், தமிழினம் என்றோர் இனமுண்டு என்பதை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்து பெருமை, நமது தேசியத்தலைவர் அவர்களைச்சேரும்.

சராசரி மனிதனாக, ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி, பல்வேறு உடைகளை உடுத்தி அழகு பார்த்து, படிக்க வைத்து, அவனுக்கு மணம் செய்து வைத்து மகிழ்தலை பெரிதாக எண்ணாமல், தான் பெற்ற மகனை, தமது இனத்திற்காக முன்னின்று சமர் செய்யடா என்று கூறிய பெருமைக்குரியவர்.

பின்குறிப்பு: இந்த பதிவின் மூலம் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்ட மக்களுக்காக, நான் வருத்தப்படுவதற்காக மட்டுமே.

5 comments:

Anonymous 23 May 2009 at 21:39  

we are all fed up of reading articles about of karunanidhi.. pls pls sit and think abt something else...

தமிழ் 25 May 2009 at 00:24  

நீங்க சொல்றது கூட சரிதான். என்னைக்கு தி மு க னு ஒரு கட்சி ஆரம்பிச்சிதோ அன்னைக்கு ஆரம்பிச்ச பிரச்சினை... ஆனா, இன்னைக்கும் மக்கள் இப்படி இருக்காங்களே அப்படிங்கிறதுதான் ஆதங்கம்...

ஷோபிகண்ணு 25 June 2009 at 11:52  

//ஓட்டு 500, கலைஞர், தமிழினத்துரோகி//

லேபிள் அருமை.

vettippayapullaiga 26 November 2009 at 02:58  

athu sari dmk apdinale thi mu ga &co ngra combanythane

vettippayapullaiga 26 November 2009 at 02:58  
This comment has been removed by a blog administrator.
முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...