கப்பலேறி போயாச்சு!!!!

>> Monday, 14 July 2008

"கப்பலேறி போயாச்சு!!! சுத்தமான ஊராச்சு!!!" என்னடா நம்ம பாசக்கார பய புள்ள பாட்டு படிக்குறானேனு பாக்குறீங்களா??. வெயிட் பண்ணுங்க மேட்டருக்கு வாரேன்.


எப்பவும் டியூப் டிரைன்ல போறதுக்கு முன்னாடி லண்டன் நியூஸ் (The london paper) பேப்பர வாங்கி கைல வச்சுக்கிட்டுதான் டிராவல் பண்ணுவேன். அப்பதான் வெள்ளைக்கார பசு வெறிக்கும்னு என்னோட நீண்டகால நண்பர் M&S செந்தில் சொல்லிருக்காரு. அவருக்கு என்ன அனுபவமோ தெரியல(???).
போன வாரம் டியூப் டிரைன்ல போறப்ப ஒரு வெள்ளைக்கார குட்டிக்கூட இந்த மாமன பாக்குறதுக்கு District linela வரலை. நான் காதை கழட்டி போடுற அளவுக்கு இருந்த தமிழ் பெண்களும் ஒரு முக்கிய(???) சமாச்சாரம் கூட பேசலை.

சரி என்ன பண்ணாலாம்னு பாக்குறப்ப கைல வச்சுருந்த லண்டன் பேப்பர பார்த்துக்கிட்டுருந்தேன். அதுல இருந்த வெள்ளைக்கார குட்டிகள பாக்குறப்ப "Funny News"னு இந்தியா பத்திய நியூஸ பார்த்தேன். அதுல திருச்சி பக்கத்துல இருக்குற முசிறி நகராட்சில மக்கள் பொதுக்கழிப்பிடத்தை யூஸ் பண்ணுனா 50P மாசம் தருகிறதா இந்த முசிறி நகராட்சி அறிவிச்சுருக்கு.

அடப்பாவிகளா எங்க எங்கயோ கொள்ளையடிச்சு கடைசில மக்களோட அவசர பிரச்னைல கூட கைய வச்சுடிங்களானு நெனச்சு என்னோட தலையில அடிச்சுக்கிட்டேன். சரி நீங்க கொள்ளையடிங்க அதுக்காக நம்ம மானத்த லண்டன் மாநகர்ல சந்தி சிரிக்குறளவுக்கா கொள்ளையடிக்கிறது.

அப்படானு அடுத்த நாள் ஆபிஸுக்கு வந்தா பக்குத்துல இருக்குற வெள்ளைக்காரன் "உங்க ஊர்ல ஒண்னுக்கு போறதுக்கு எவ்வளவு தருவாங்க"னு நக்கலா கேக்குறான்.


1 comments:

தமிழ் 16 July 2008 at 12:03  

நீங்கள் போடும் எல்லா நாமங்களும் வாழ்க!!

நல்லாருக்கு தல!

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...