என்ன கொடுமை கலைஞர் இது?

>> Sunday, 25 October 2009

கொய்யாலு! ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?????

>> Thursday, 8 October 2009

புரட்சி சுனாமி சாம் ஆண்டர்சன் பாலிவுட்டில் அபார சாதனை!!!

>> Wednesday, 7 October 2009

"தமிழ் திரையுலகின் விடிவெள்ளி", "புரட்சி சுனாமி" மற்றும் "நடன சூறாவளி" ஆகிய ரசிக பட்டாளங்கள் வழங்கிய பட்டங்களை மக்களுக்காக சுமையென கருதாது தாங்கி கொண்டிருக்கும் நமது தல "சாம் ஆண்டர்சன்" சமீபத்தில் பாலிவுட்டிலும் கால் பதித்து தனது திறமையை திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.. வெத்துவேட்டான "வேட்டைகாரன்" படத்திற்கே பல தில்லாலங்கடி விளம்பரங்களை கடந்த ஒரு வருடமாக வெளியுட்டு கொண்டுள்ள டாக்(டர்) விஜய் போன்றவர்கள் மத்தியில் விளம்பரத்தை விரும்பாது தனது முக தோற்றத்தையே முற்றிலும் மாற்றி "MUPPET" என்ற பாலிவுட் படத்தில் நடனம் என்ற பெயரில் நாதாரி தனம் புரிந்துள்ளார்.




முழு பூசணிக்காய எப்படி சோற்றில் மறைக்க முடியாதோ அதே மாதிரி தல என்னதான் ஜிங்கிடி மேக்கப் போட்டு சூறாவளியா(?????) சுழன்று டான்ஸ்(!!!!!!!!!!!) பண்ணினாலும் , அவரோட தொப்பை அது நம்ம தல "சாம் ஆண்டர்சன்" னு காமிச்சு கொடுக்குது.
"ஸ்லம்டாக் எ மில்லினர்" படத்திற்கு பிறகு இப்படத்திற்கும் , ஈடு இணையில்லா நடனத்திற்கும் நமது "புரட்சி சுனாமி" சாம் ஆண்டர்சனுக்கு இவ்வருட ஆஸ்கார் விருது கண்டிப்பாக வழங்கப் படும் என்று ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசபடுவது குறிப்பிடத் தக்கது.

முக்கிய அறிவுப்பு:

தயவு கூர்ந்து இருதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த நடனத்தை பார்க்க தவிர்க்கவும்.

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...