Showing posts with label bad security in india. Show all posts
Showing posts with label bad security in india. Show all posts

மன மாற்றம்!

>> Monday, 15 September 2008

6 ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவை விட்டு தாய்நாட்டுக்கு சென்றுவிடலாம் என்று என்னி ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்கின்றேன்.

இந்த நேரத்தில், பெங்களூரு, அஹமதாபாத், டெல்லி என்று எல்லா ஊர்களிலும் வெடிகுண்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் எத்துனை காரணங்களை முன்வைத்து, என் முடிவை எடுத்தேனோ, என் மனதை மாற்றி, அமெரிக்காவோ, அல்லது எந்த ஒரு அன்னிய நாடோ வேண்டாமென்று இருந்தேனோ அந்த மனதில் இப்போது விடை தெரியாத 
பல கேள்விகள் தோன்றியுள்ளன.

நான் படித்தேன், வேலை கிடைத்தது, என் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என்று அளவோடு வாழ்ந்து வருகிறேன்.

முதல் கேள்வி: நானும், என் குடும்பமும், என்னை சார்ந்தவர்களும், ஏன் 'குண்டு' வெடிப்பில் இறக்க வேண்டும்?

நான் செய்த தவறு என்ன?

இந்தியனாகப் பிறந்ததா?

1993 ல் பம்பாயிலும், 1998 ல் கோயம்புத்தூரிலும், தொடங்கி, இன்றுவரை பெங்களூர், பார்லிமென்டு கட்டடம், மீண்டும் பெங்களூர், அஹமதாபாத், டெல்லி என்று தீவிரவாதத்தின் வேலைப்பாடுகள் அதிகரிக்க ஆரம்பத்துள்ளது.

இனி அடுத்து எந்த ஊரில், எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற அச்சம் மக்களின் மனத்தில் ஆழப்பதிந்துள்ளது.

யார் காரணம்: 

நான் எந்த ஒரு மதத்தையோ அல்லது இனத்தையோ குறை கூறவில்லை. அரசாங்கப்பணியில் உள்ளவர்களும், அரசியல்வாதிகளும் அவர்களுடைய கடமையை அறியாமல் இருப்பதே இதற்கு காரணம்.

குற்றம் செய்தவன் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக்கொள்ளும் வேளையில் அவனுக்கு தக்க தண்டனை கொடுக்கும் நீதி மன்றம், இப்படிப்பட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க தாமதப்படுத்துவது ஏன்?

நீதிமன்றங்கள் இன்று நிதி மன்றங்கள் ஆகிவிட்டன என்று ஒரு கவிதை வரி உள்ளதை நான் இங்கே நினைத்துப்பார்க்கின்றேன்.

உண்மைதான்.

பல சங்கதிகளை, பலமுறை அலசி ஆராய ஆரம்பித்ததின் பலன், மீண்டும் அமெரிக்கவிலேயே தங்கிவிடலாமா என மனதை வினவிக்கொண்டுள்ளேன்.

எந்த ஒரு மனிதனுக்கும், அவனது அடிப்படை தேவைகளான, உணவு, உடை, உறைவிடம் கிடைத்தால் அவன்தான் உலகத்தில் அதிக மகிழ்ச்சி அடைபவன்.

ஆனால் இன்று அவைகள் இருந்தும், அடுத்த வினாடி எங்கு குண்டு வெடிக்குமோ என்றென்னும்போது, இருக்கும் இடத்தை விட்டு எங்கும் போக, தாய்நாட்டிற்கும் சேர்த்துதான், மனம் தயக்கம் கொள்கிறது.

பாதுகாப்பில்லா வாழ்க்கையில் பணமிருந்தும் என்ன பயன்?

Read more...
முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...