Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

இரகசிய விமான தளம்....

>> Tuesday, 9 September 2008

அது ஒரு இரகசிய விமான தளம். கட்டுப்பாடு மிக்க பிரதேசம். இந்திய வான்படைக்குச் சொந்தமான அந்தத்தளம் வேறெவரும் அறியாத ஒன்று. ஒருநாள் ஒரு தனியார் குட்டி விமானம் அங்கே வந்து தரையிறங்கியது. வான்படைக் காவலர்கள் சுற்றி வளைக்க, விமானத்தில் இருந்த ஒரே பயணியான விமானி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடும் விசாரணைக்குப் பின், "அந்த விமானம் வழிதவறி எங்கெங்கோ அலைந்து, எரிபொருள் தீர்ந்து, வேறுவழியின்றி இந்தக் கட்டுக்காவல்மிக்க பகுதியில் இறங்கியதாகத் தெரியவந்தது. குட்டி விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. விமானி கடுமையாக எச்சரிக்கப்பட்டார். "இந்த இடம் பற்றி எவரிடமும் தெரிவிக்கக் கூடாது. மீறினால் உன் மிகுதி வாழ்க்கை சிறையில்தான்..!".விமானம் புறப்பட்டது. அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பினர். ஆனால் மறுநாளும் அதே விமானம், வந்து தரையிறங்கியது. இம்முறை அதில் இரு பயணிகள் இருந்தனர்.மீண்டும் காவலர்கள் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்தனர். ஒருவர் அதே பழைய விமானி..!
வெகுண்ட வான்படை தளப் பொறுப்பாளர், விமானியின் தலைமுடியை கொத்தாகப் பிடித்து உலுக்கியபடி கேட்டார்..உன்னுடைய இந்தச் செயலுக்கு என்ன தண்டனை தெரியுமா..? "தெரியும்.. என்னை எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. 'நேற்று இரவு முழுதும் எங்கே தங்கியிருந்தீர்கள் என்று என்னை படுத்தும் என் மனைவியை நம்பவைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை..!" என்று சக பயணியான திரு"வாட்டி" மொக்கையைச் சுட்டிக்காட்டியபடி கதறினார் மிஸ்டர். விமானி..!

Read more...

மிஸ்டர்.மொக்கை ஜோக்ஸ்

>> Tuesday, 19 August 2008

திருமதி. மொக்கை தோழியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்..
"என் பக்கத்து வீட்டு பத்மா இருக்காளே.. சுத்த மோசம்.. தன் புருஷனை இப்படியா கேவலமா பேசுவா..? இப்போ என்னையே எடுத்துக்கோ.. என் புருஷன் சுத்த மொக்கை. ஒன்னுக்கும் புண்ணியமில்லாதவர்.. வடிகட்டின முட்டாள்... சரியான வேஸ்ட்.. ஆனா நான் என்னிக்காவது, அவரைப்பற்றி யார்கிட்டயாவது தப்பாச் சொல்லியிருக்கேனா..?
_________________________________________________________________

மிஸ்டர்.மொக்கை தன் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தார்..
நான் அப்பா ஆகப்போறேண்டா..!
கங்கிராட்ஸ் மொக்கை.. அதை ஏன் இவ்வளவு வருத்தத்தோட சொல்றே..?
பயமா இருக்குடா.. இந்த விஷயம் இன்னும் என் மனைவிக்கு தெரியாது..!
_________________________________________________________________
மொக்கையும், தண்டபாணியும் மரம் அறுக்கும் மில்லில் வேலை செய்தார்கள். ஒருநாள் (தண்ட)பாணி, தவறுதலாக சுழலும் வாளுக்குள் கையை விட்டுவிட்டான். கை துண்டானது. மொக்கை உடனடியாக, ஒரு பாலிதீன் கவரில் வெட்டுண்ட கையைப் போட்டு, பாணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மறுநாள் பாணியைப் பார்க்க போனபோது, அவன் படுக்கையில் இல்லை. மொக்கை செவிலியிடம் விசாரித்தார்.
"தோட்டத்தில் பூப்பறிச்சுகிட்டு இருக்கார்" என்று செவிலி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாணி உள்ளே பூக்கூடையுடன் வந்தான். வெட்டுண்ட கை சரியாக ஒட்டியிருந்தது.
மறுநாளே பணிக்குத் திரும்பிய பாணி, கவனக்குறைவாக காலை ரம்பத்துக்குள் விட்டுவிட்டான். மொக்கை முன்போலவே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மறுநாள் போனபோது, பாணி மூன்றாவது மாடிக்கு ஒரு நோயாளியை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்தார்.
மீண்டும் வேலைக்கு வந்த பாணி, இம்முறை தலையை வெட்டிக்கொண்டுவிட,மீண்டும் மொக்கை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மறுநாள் பார்ப்பதற்காக போனார். பாணி படுக்கையில் இல்லை.
செவிலியிடம் மொக்கை கேட்டார்..
"எங்கே என் நண்பன் பாணி..? கல் சுமக்க போயிருக்கிறானா..?
"இல்லே.. செத்து பூட்டான்..!'
"அய்யோ.. எப்படி..?"
"நேத்து அவன் தலையை எவனோ ஒரு முட்டாள் பாலிதீன் பையில் சுற்றி எடுத்து வந்திருக்கிறான்.. வரும்போதே மூச்சுத் திணறி செத்துப் போயிட்டான் போல..!"
_________________________________________________________________

Read more...
முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...