சரம் - சரமாரியாக வெடிப்பவன்

>> Friday, 6 June 2008

சரம் என்றவுடன் உங்களுக்கு மல்லிகை சரம் நினைவுக்கு வந்தால் நீங்கள் WIPRO "சரோஜா சாமன் நிக்காலோ" புகழ் சரவணன் போல சமீபத்தில் திருமணம் ஆனவராக இருக்கலாம்.
சரம் என்றவுடன் சர வெடி நினைவுக்கு வந்தால் நீங்கள் ராமகிருஷ்ணன் தோத்ததிரி போல சமீபத்தில் மாமனார் காசுல தலை தீபாவளி கொண்டாடியவராக இருக்கலாம்.

சரம் என்றவுடன் அவ"சரமா" டாய்லெட்டுக்கு ஓடியது நினைவுக்கு வந்தா நீங்க டயாபெட்டிஸ் நேயாளியா இருக்கலாம்.
சரம் என்றவுடன் சூடி கொடுத்த சுடர் கொடி நினைவுக்கு வந்தால் நீங்க பெரும் பழமாக (கிட்டதட்ட என்னை மாதிரி) இருக்கலாம்.
சரம் என்றவுடன் பச்சை கிளி முத்துச் சரம் என நீங்கள் பாடினால் நீங்கள் எம்ஜிஆர் ரசிகர். கரக்ட்டா? இல்ல, டக்குனு ஜோதிகா முகம் நினைவுக்கு வந்தால் பிறர் மனை நோக்கா பேராண்மையாளர் நீங்க தான். ஹிஹி.
இதை எல்லாம் மீறி நீ என்னடா சொல்ல போற வெளக்கெண்ணைனு நீங்க முனுமுணுக்குறது எனக்கு நல்லாவே கேக்குது.


எனக்கு சமீபக்காலமா சரம் என்றாலே நான் குடியிருந்த கோயில் CULLYN தான் நியாபகத்துக்கு வந்தது.CULLYN மக்கள் பல ஆண்டுகளாக விதைத்த விதை இன்று கார்த்திக் மூலம் சரம் என்ற பயிராக உள்ளதை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். கூடிய விரைவில் (நவம்பரில்) இப்பயிர் அறுவடையும் செய்யப்படும் என்பதை தெரிவிப்பதில் பேரானாந்தம் கொள்கிறேன்

சரம் திரைப்படம் வாழ துடிக்கும் ஒவ்வொரு சராசரி இளைஞனின் வாழ்வியல். இது சாதாரண திரைப் படங்களுக்கு நடுவினில் விரிந்திருக்கும் திரைக் காவியம். இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் விமலன் திரையுலகிற்கு புதுமுகமாக இருந்தாலும், பன்முகம் காட்டி பிரமிக்க வைக்கிறான்.

என்னுடைய நீண்ட கால கிளாஸ்மேட் (படிப்பில் அல்ல!!! சரக்கு அடிப்பதில்!!) செந்தில் வில்லன் கேரக்டருக்கு ஒரு புதிய அத்தியாயத்தை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் ரகுவரன் இழப்பால் வலுவிழந்த தமிழ் திரையுலகிற்கு செந்திலின் வரவு நிச்சயமாக பலம் கூட்டுமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

போலீஸ் அதிகாரியாக வாழ்ந்துக் காட்டியுள்ள என்னுயிர் தோழன் கிஷ்ணா(எ) கிருஷ்ணா பத்மாபய்யர் ரசிகர்களை மிரள வைத்துள்ளான். இப்படத்தில் நடிப்பதற்காக என்கவுண்டர் புகழ் அதிகாரி ஜாபர் சேட்டிடம் கிஷ்ணா ஸ்பெஷல் டிரைனிங் எடுத்து படத்தில் மலைக்க வைத்துள்ளான்.

டபாய் கார்த்தி கேமராவை கையாண்ட விதம் மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது. கேமராவின் ஒவ்வொரு கோணத்திலும் அவனுடைய கடின உழைப்பு தெளிவாக தெரிகிறது. கார் சேஸிங் காட்சிகளை படமாக்கியுள்ளவிதம் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சவால் விடும் வண்ணம் உள்ளது.

இப்படத்தில் டைரக் ஷனும் ஒளிப்பதிவும் இரட்டைக் குழல் துப்பாக்கிப் போல் பயமுறுத்துக்கின்றன. இப்படத்திற்காக கார்த்திக்கு மிகச் சிறந்த டைரக்டர் & ஒளிப்பதிவாளர் அவார்டு கெடைக்கும் என்று பரவலாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

0 comments:

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...