"தி ஹேப்பனிங்" பட விமர்சனம்

>> Sunday 29 June 2008

நைட். ம. ஷ்யாமலனின் அடுத்த முயற்சி.

ஒரு நல்ல படத்தோடு ஆரம்பித்து இன்று ஆங்கில திரையுலகில் தனக்கென முத்திரை பதித்திருக்கும் இவரின் லேடஸ்ட் படைப்புதான் "தி ஹேப்பனிங்".

6த் சென்ஸ் இருப்பவர்கள் மட்டுமே பார்க்க கூடிய படங்களை மட்டுமே கொடுப்பவர் இவர். இவரின் அடுத்தடுத்த படைப்புகள் அனைத்துமே வெகு வித்தியாசமானவை.

படம் நியூ யார்க் நகரத்தில் ஒரு அழகான பூங்காவில் கோரமான தற்கொலையுடன் ஆரம்பிக்கின்றது. இயற்கையின் விளையாட்டுகளில் மழை, வெள்ளம், புயல், சுனாமி, சூறாவளி, பூகம்பம், எரிமலை என பல நிகழ்வுகள் நம்மில் யாருக்கும் புதிதானதல்ல.

அதையும் தாண்டி, புதிரான சில சம்பவங்கள் உலகில் நடந்தவண்ணம் உள்ளன. அவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து இப்படியும் நடக்கலாம் என்று கூறும் அற்புதமான கலையில் ஷ்யாமலனுக்கு நிகர் அவரேதான்.

அப்படிப்பட்ட சம்பவம்தான் நியூயார்க் நகரில் நிகழ்கிறது. அங்கிருந்து மக்கள், கதையின் நாயகன் நாயகி உள்பட, வெளியேறுகிறார்கள்.

படத்திற்கு நாயகன் ஒருவரை வைத்து, அவருக்கும் நிகழும் சம்பவத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி இருக்கும் விதம் அருமை.

சம்பவத்தின்போது, நாயகனுக்கு உதவும் ஒரு வில்லேஜ் விவசாயி, தாவரங்கள் கேட்கும் சக்திகொண்டவை என கூறுகிறார். இதன் மூலம், தாவரங்களுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும் என்று படம் பார்க்கும் நம்மால் யூகிக்க முடிகின்றது.

கதையின் நாயகன் அவருடன் வரும் கூட்டத்தை பிரிந்து செல்ல அறிவுறுத்துகிறார். இதனால் உயிரிழப்பு தற்காலிகமாக தவிற்கப்படுகிறது.

தாவரங்களில் வேதி வினைகள் (chemical reaction) விளைவிக்கும் காற்றால் மக்களின் மனம் மாறும் என நம்ப முடிகிறது.

ஆனால், கூட்டமாக செல்லாமல் பிரிந்து சென்றால், அந்த தாக்கத்தின் வேகம் குறைவு என்னும் அறிவியல் ஒத்துக்கொள்ள முடியாததாக உள்ளது.

Special effects மிகவும் நன்றாக இருந்தபோதும், அடுத்து வரும் காட்சி எதிர்பார்த்த ஒன்றாக இருப்பது படத்தின் திரைக்கதைக்கு மைனஸ்.

ஹீரோ வெளியே வருகிறார், நடந்து சென்று காதலியுடன் இணைகிறார். ஆனால், வெளியில் காற்று மட்டும் பலமாக வீசிக்கொண்டிருக்கிறது.

இந்த காட்சியை யாரும் விமர்சிக்க முடியாத அளவிற்கு இயற்கையை காரணமாக்கி இருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

ஒவ்வொரு காட்சியிலும் நேரத்தை குறிப்பிட்டிருக்கும் இயக்குனர், இந்த சம்பவங்கள் முற்று பெற்ற நேரத்தை குறிப்பிட்டு, ஹீரோ வந்த காட்சியை யாரும் குறை கூறாமல் பார்த்துக்கொள்கிறார். நல்ல யோசனை.

படத்திற்கு பின்னனி இசை அற்புதம்.

ஊருக்கு வந்த ஹீரோ, நடந்த சம்பவத்தை மறக்க ஆரம்பிக்கும்போது, இதே போன்ற தற்கொலை சம்பவம் ரஷ்யாவில் நிகழ ஆரம்பிக்கின்றது...

திரைப்படத்தில் நிகழும் சம்பவங்களோடு பயங்கரவாதிகளை உள்ளிழுக்கும் முறை தவறான, விபரீதமான ஒன்று. அப்படிப்பட்ட ஒன்றை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் படம் பார்ப்பவர்களை ஏமாற்றவில்லை என்றாலும் எதிர்பார்த்தவர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது என்பதுதான் உண்மை.

இசை - நன்று
இயக்கம் - நன்று
கதை மற்றும் திரைக்கதை - யோசித்திருக்கலாம்

மதிப்பென்: 5/10

0 comments:

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...