உங்க சிரிப்பு... அது எங்க பொறுப்பு....
>> Tuesday, 17 June 2008
வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..
ஏன்.. ரொம்ப சண்டை போடறாரா..?
இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!
_________________
ஏன் உங்களை அரண்மனை வேலையில் இருந்து நீக்கிட்டாங்க..?
மாமன்னர் வருகிறார்ன்னு சொல்றதுக்கு பதிலா மாமனார் வருகிறார்ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்..!
_________________
கோவிலில் இருவர்..
யோவ்.. என்ன உண்டியலுக்குள்ளே கை விடறே..?
ஹி..ஹி.. தப்பா நினைக்காதீங்க.. 50 பைசா போடறதுக்கு பதிலா 1 ரூபாய் போட்டுட்டேன்.. அதான் பாக்கிக் காசை எடுக்கறேன்..
_________________
கல்யாண வீட்டில்..
மாப்பிள்ளை அடிக்கடி தரை டிக்கெட்டில் சினிமா பார்ப்பாரோ..?
அட.. ஆமாம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க..?
கரண்ட் கட் ஆனதும் மண்டபமே கிழியறாப்பல விசில் அடிக்கிறாரே..!
_________________
ஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..?
சுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..!
_________________
இருந்தாலும் நம்ம தலைவருக்கு இவ்வளவு ஜொள்ளு ஆகாது..
ஏம்பா.. என்ன ஆச்சு.. கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கு "கையில்லாத இலவச நைட்டி வழங்கும் திட்டம்" அறிவிச்சுருக்காரே..!
_________________
எதுக்கு தலைவரே.. மூனாவது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தைக் காலில் நிற்கறீங்க..?
ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றமாமே..!
_________________
தயாரிப்பாளர் ; நீங்க இப்போ சொன்ன கிராமத்துக் கதை நம்பும்படியா இல்லையே..
கதாசிரியர் ; கவலைப்படாதீங்க.. படம் 500 நாள் ஓடும்..
தயாரிப்பாளர் ; நீங்க முதல்ல சொன்ன கிராமத்துக் கதையே பரவாயில்லே..!
_________________
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
_________________
மேனேஜர் சார்.. உங்க ஸ்டெனோ அனு ரொம்ப அதிகப்படியா இருக்காங்க.. உங்களைப் பார்க்க வர்றப்போ என் காலை மிதிச்சுட்டு சாரி கூட சொல்லாமப் போறாங்க..
வாசலில் அனு மிதி பெற்று உள்ளே வருக ன்னு போட்டிருக்கோமே பார்க்கலையா..?
_________________
ஏண்டி.. நீ மாசமா இருக்கறது தெரிஞ்சுமா உன் புருஷன் கரண்ட் பில் கட்டாம வீட்டை இருட்டுல போட்டு வச்சிருக்காரு..?
அவர் போட்டோ கிராபர்டி.. இருட்டறையில இருந்தாதான் பிள்ளை நல்லா டெவலப் ஆகுமாம்..
_________________
அவள் ; ஏண்டி.. உனக்கு கிளார்க் லவ் லெட்டர் கொடுத்ததை மேனேஜர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினியா../
இவள் ; ஆமாண்டி.. நல்லா டோஸ் விட்டாரா..? என்ன சொல்லித் திட்டினார்..?
அவள் ; உனக்கு என்ன கண்ணு அவிஞ்சா போயிடுச்சு.. போயும் போயும் அந்தக் குரங்குக்கா லட்டர் கொடுத்தேன்னு திட்டினார்..
_______________
ஆபீஸ் பியூன் கிட்டே சண்டை போட்டது தப்பாப் போச்சு..?
ஏன் .. என்னாச்சு..?
சம்பள உயர்வு வந்ததை வீட்டுல போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி..!
_________________
நடிகை ஜிகினாஸ்ரீ இன்னிக்கு விழாவுக்கு வராங்கன்னு போனியே.. என்னாச்சு..?
கனவுக்கன்னியை கனவுல பார்த்துக்கோங்கன்னு எல்லாருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வச்சுட்டாங்கடா..!
_________________
ஏன் நடிகை கொய்யாஸ்ரீ திருமணத்தை பத்திரிக்கைக்காரங்க புறக்கணிச்சுட்டாங்க..?
பின்ன என்ன.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை முறைப்படி திருமணம் செஞ்சுகிட்டா கோபம் வராதா..?
_________________
காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..?
நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..!
_________________
எங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்..
அதுக்காக நாக்கை நீட்டச் சொல்லிட்டு அதில ஸ்டாம்பை ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..?
_________________
கல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன் தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்..
ஏங்க..? எதுவும் தப்பாயிட்டுதா..?
முதலிரவு அறைக்குள்ள 3 கேமிரா இருக்கு பாரு..!
_________________
சேவகன்1:-"நமது மன்னருக்கு மகாராணி மீது எப்படிச் சந்தேகம் வந்தது?"
சேவகன்2:-"குட்டி இளவரசரிடம் 'நீ (good)'குட்'பாயா.. (Bad)'பேட்'பாயா?'னு மன்னர் கேட்டதுக்கு 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்!"
_________________
மன்னன்: எதிரி நாட்டு மன்னனின் அறைகூவலை இனிமேலும் நம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது மந்திரியாரே!
மந்திரி: போருக்குத் தயாரென ஓலை அனுப்பட்டுமா மன்னா?
மன்னன்: வேண்டாம் அறைகூவல் கேட்காவண்ணம் சவுண்ட் புரூஃவ் சிஸ்டம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
_________________
பெண்:- முப்பத்தேழுக்கு மேல குழந்தை பெத்துக்கவாய்ப்பு இருக்கா, டாக்டர்?
டாக்டர்:- ஆமாம்! அதுசரி அத்தனை குழந்தைகளைப் பெத்துக்கிட்டு கின்னஸ் சாதனையா பண்ணப்போறே?
_________________
நீங்க 100 வயது வரை வாழக் காரணம்?
1905 லே பிறந்ததுதான்
_________________
ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.. துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..
அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..
அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?
குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..
அதி ; பணிப் பெண்கள்..?
குர ; பெல்ட் போட உதவினார்கள்..
அதி ; விமானிகள்.. ?
குர ; விமானத்தை கிளப்பினார்கள்..
அதி ; நீ என்ன செய்தாய்..?
குர ; வேடிக்கை பார்த்தேன்..
அதி ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?
குர ; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர் பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தைக் கையாண்டூ கொண்டிருந்தார்கள்..
அதி ; நீ என்ன செய்தாய்..?
குர ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!
அதி ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?
குர ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..
அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?
குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!
_________________
அந்த டாக்டர் ஒரு பெரிய தாதாவுக்கு ஆபரேஷன் பண்றதா இருந்திச்சி.. ஆனா டாக்டர் முடியாதுன்னுட்டார்...
ஏன்?
எல்லோரும் என்கவுண்ட்டர்னு கிண்டல் பண்ணாங்களாம்...
_________________
அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்போல...
எதை வச்சு சொல்றீங்க??
ஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட உயிர் மேல ஆசை இருந்தா ஓடிப்போயிடுன்னு கடைசி வாய்ப்பு தர்றாரே....
_________________
0 comments:
Post a Comment