இரகசிய விமான தளம்....
>> Tuesday, 9 September 2008
அது ஒரு இரகசிய விமான தளம். கட்டுப்பாடு மிக்க பிரதேசம். இந்திய வான்படைக்குச் சொந்தமான அந்தத்தளம் வேறெவரும் அறியாத ஒன்று. ஒருநாள் ஒரு தனியார் குட்டி விமானம் அங்கே வந்து தரையிறங்கியது. வான்படைக் காவலர்கள் சுற்றி வளைக்க, விமானத்தில் இருந்த ஒரே பயணியான விமானி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடும் விசாரணைக்குப் பின், "அந்த விமானம் வழிதவறி எங்கெங்கோ அலைந்து, எரிபொருள் தீர்ந்து, வேறுவழியின்றி இந்தக் கட்டுக்காவல்மிக்க பகுதியில் இறங்கியதாகத் தெரியவந்தது. குட்டி விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. விமானி கடுமையாக எச்சரிக்கப்பட்டார். "இந்த இடம் பற்றி எவரிடமும் தெரிவிக்கக் கூடாது. மீறினால் உன் மிகுதி வாழ்க்கை சிறையில்தான்..!".விமானம் புறப்பட்டது. அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பினர். ஆனால் மறுநாளும் அதே விமானம், வந்து தரையிறங்கியது. இம்முறை அதில் இரு பயணிகள் இருந்தனர்.மீண்டும் காவலர்கள் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்தனர். ஒருவர் அதே பழைய விமானி..!
வெகுண்ட வான்படை தளப் பொறுப்பாளர், விமானியின் தலைமுடியை கொத்தாகப் பிடித்து உலுக்கியபடி கேட்டார்..உன்னுடைய இந்தச் செயலுக்கு என்ன தண்டனை தெரியுமா..? "தெரியும்.. என்னை எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. 'நேற்று இரவு முழுதும் எங்கே தங்கியிருந்தீர்கள் என்று என்னை படுத்தும் என் மனைவியை நம்பவைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை..!" என்று சக பயணியான திரு"வாட்டி" மொக்கையைச் சுட்டிக்காட்டியபடி கதறினார் மிஸ்டர். விமானி..!
4 comments:
meeee the firstuuuu!!!!!!!!!!!
superrrr!!!!!!!i'm not a blogger but a regular reader!
மலர் ,
உங்கள் வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு நன்றி !!!
என்ன கொடும சார் தாங்க முடியல கதை
இத என்னன்னு சொல்ல .......
Post a Comment