6 ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவை விட்டு தாய்நாட்டுக்கு சென்றுவிடலாம் என்று என்னி ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்கின்றேன்.
இந்த நேரத்தில், பெங்களூரு, அஹமதாபாத், டெல்லி என்று எல்லா ஊர்களிலும் வெடிகுண்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
நான் எத்துனை காரணங்களை முன்வைத்து, என் முடிவை எடுத்தேனோ, என் மனதை மாற்றி, அமெரிக்காவோ, அல்லது எந்த ஒரு அன்னிய நாடோ வேண்டாமென்று இருந்தேனோ அந்த மனதில் இப்போது விடை தெரியாத
பல கேள்விகள் தோன்றியுள்ளன.
நான் படித்தேன், வேலை கிடைத்தது, என் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என்று அளவோடு வாழ்ந்து வருகிறேன்.
முதல் கேள்வி: நானும், என் குடும்பமும், என்னை சார்ந்தவர்களும், ஏன் 'குண்டு' வெடிப்பில் இறக்க வேண்டும்?
நான் செய்த தவறு என்ன?
இந்தியனாகப் பிறந்ததா?
1993 ல் பம்பாயிலும், 1998 ல் கோயம்புத்தூரிலும், தொடங்கி, இன்றுவரை பெங்களூர், பார்லிமென்டு கட்டடம், மீண்டும் பெங்களூர், அஹமதாபாத், டெல்லி என்று தீவிரவாதத்தின் வேலைப்பாடுகள் அதிகரிக்க ஆரம்பத்துள்ளது.
இனி அடுத்து எந்த ஊரில், எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற அச்சம் மக்களின் மனத்தில் ஆழப்பதிந்துள்ளது.
யார் காரணம்:
நான் எந்த ஒரு மதத்தையோ அல்லது இனத்தையோ குறை கூறவில்லை. அரசாங்கப்பணியில் உள்ளவர்களும், அரசியல்வாதிகளும் அவர்களுடைய கடமையை அறியாமல் இருப்பதே இதற்கு காரணம்.
குற்றம் செய்தவன் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக்கொள்ளும் வேளையில் அவனுக்கு தக்க தண்டனை கொடுக்கும் நீதி மன்றம், இப்படிப்பட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க தாமதப்படுத்துவது ஏன்?
நீதிமன்றங்கள் இன்று நிதி மன்றங்கள் ஆகிவிட்டன என்று ஒரு கவிதை வரி உள்ளதை நான் இங்கே நினைத்துப்பார்க்கின்றேன்.
உண்மைதான்.
பல சங்கதிகளை, பலமுறை அலசி ஆராய ஆரம்பித்ததின் பலன், மீண்டும் அமெரிக்கவிலேயே தங்கிவிடலாமா என மனதை வினவிக்கொண்டுள்ளேன்.
எந்த ஒரு மனிதனுக்கும், அவனது அடிப்படை தேவைகளான, உணவு, உடை, உறைவிடம் கிடைத்தால் அவன்தான் உலகத்தில் அதிக மகிழ்ச்சி அடைபவன்.
ஆனால் இன்று அவைகள் இருந்தும், அடுத்த வினாடி எங்கு குண்டு வெடிக்குமோ என்றென்னும்போது, இருக்கும் இடத்தை விட்டு எங்கும் போக, தாய்நாட்டிற்கும் சேர்த்துதான், மனம் தயக்கம் கொள்கிறது.
பாதுகாப்பில்லா வாழ்க்கையில் பணமிருந்தும் என்ன பயன்?
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் தீவிரவாதம் வளர்ந்துகொண்டே இருக்கிறது . ஏன் தீவிரவாதம் வளர்கிறது என்று அரசு நினைப்பது இல்லை ? பசி, பட்டினி, வேலை இல்லா திண்டாட்டம் , மனித உரிமைகள் மறுக்க படும் போது , இன வெறி தலை விரித்து ஆடும் போது , தீவிரவாதம் வளர்கிறது . தீவிரவாதம் வளர்வதற்கான முயற்சிகளை கண்டு அறிந்து அதை போக்க முயற்சி மேற்கொள்ளாவிடில் தீவிரவாதம் தொடர்கதைதான்.
(நாளை அமெரிக்காவுக்கும் ஆபத்து வரலாம் அப்ப என்ன பண்ணுவீங்க சார்)
நன்றி தல!
நீங்க கேட்ட கேள்விய நானே ஒரு தடவை கேட்டுகிட்டேன். ஆனா பாருங்க, ஒரு கட்டடம் இடிஞ்சு போனதுக்கே, ஒரு நாட்டையே அழிச்சிட்டாங்க, ஆனா, நாம தினமும் நம்மோட பிறந்த அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள் எல்லாத்தையும், தீவிரவாதிகளின் பலிகடாக்களாக மாற்றிக்கொண்டுள்ளோம் அப்படிங்கிறதுதான் வேதனையான உண்மை!
இந்த தீவிரவாதம் வெறும் பசி பட்டினியால் வேர் விடுவதல்ல. அதற்கும் அப்பாற்பட்டு, ஏதோ, இந்திய மக்களெல்லாம் தீண்டத்தகாதவர்களாக என்னி, அவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒன்று.
7 ஆண்டுகளான பின்னும், அமெரிக்காவில் அடுத்த செயலை செய்ய எவனுக்கும் துணிச்சல் இல்லை. காரணம், தண்டனை!
இவன் குற்றம் செய்தவனென்றால், தண்டனை அவசியம். அது இல்லை என்று தெரிந்தபின், தெருவில் சைக்கிள் செயினோடு திரிந்தவர்கள் இனிமேல் வெடி குண்டுகளுடன் திரிவார்கள்.
ஆம், தீவிரவாதம், தொடர்கதைதான், இந்தியாவில்!
வீணாப் போன காங்கிரஸ் ஆட்சி இருக்கிற வரை சிறுபான்மை க்கு ஆதரவு என்ற பெயரில் இந்த களியாட்டம் நடந்து கொண்டு தான் இருக்கும். மத்தியில் தாமரை மலர , மாநிலத்தில் இரட்டை இலை மிளிர, மக்கள் வாழ்வில் வளம் பொங்க கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவோம்.
என்னமோ போங்க தல! எந்த ஆட்சிக்கு வந்தாலும், அவனுங்களோட லட்சியங்கள், லட்சங்களிலும், கோடிகளிலும் இருக்கும்போது, இதுபோன்ற குண்டுகள் வெடித்துக்கொண்டுதான் இருக்கும்.
நாட்ட அழிச்சா தீவிரவாதம் போயிடும்னா எந்த நாடும் இருக்காது.
உலகின் மிகப்பெரிய தீவிரவாத நாடு அமெரிக்கா தான் . மற்ற நாடுகளை உசுபேத்தி விட்டு வேடிக்க பாக்குது . கடந்த கால வரலாற்று பதிவுகளை புரட்டி பார்த்தால் புரியும் . அமெரிகாவுக்கு மணி கட்டுவது யார் ? எல்லாத்துக்கும் காலம் வரும்
தீவிரவாதிகளின் ஒரே நோக்கம் மக்களிடம் பயத்தை உருவாக்குவது தான்.
(The motive of a terrorist is to terrorise people)
எப்பொழுது நாம் பயங்கரவாத செயல்களுக்கு பயப்பட ஆரம்பிக்கிறோமோ அப்போதே பயங்கரவாதிகளிடம் தோற்று விடுகிறோம்.
இவர்களை வெல்ல ஒரே வழி நம் கடமையை ஒழுங்காக செய்து பயமின்றி வாழ்வதே.
ஆகவே இந்த நாய்களுக்கு பயப்படாமல் கிளம்பி வாருங்கள், நீங்கள் வீரன் என்றால்.
இல்லை சொகுசு கண்ட ஒரு சராசரி கோழை என்றால் அங்கேயே கிடக்கவும்.
//ஆகவே இந்த நாய்களுக்கு பயப்படாமல் கிளம்பி வாருங்கள், நீங்கள் வீரன் என்றால்.
இல்லை சொகுசு கண்ட ஒரு சராசரி கோழை என்றால் அங்கேயே கிடக்கவும்//
மணி சார், கண்டிப்பா வரேன் அக்டோபரில். துணிச்சல் மட்டுமே இருந்தால் பத்தாது! ஏட்டுச்சுரக்காய் மாதிரி!
அரசியல், அரசாங்கத்தை விட்டு மக்கள் மட்டுமே தமது கடமைகளை செய்து வருகிறார்கள். அது மாறவேண்டும்.
அரசாங்கமும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதுவே என்னுடைய வேண்டுகோள்.
நான் எங்கு இருந்தாலும், சொகுசாகத்தான் இருப்பேன். கோழை ஒருநாளும் சொகுசாக இருக்க முடியாது, இது உண்மை! :-)
ஆனால் ஒன்று, என்னுடைய வினாவிற்கு யாரும் விடை அளிக்கவில்லை!
நான் ஏன் குண்டுக்கு பலியாகவேண்டும்?!
//அமெரிகாவுக்கு மணி கட்டுவது யார் ? எல்லாத்துக்கும் காலம் வரும்.
//
வயசு சார், காலம் வந்தாச்சு, அமெரிக்கா, சோஷலிசம் உள்ள நாடாக மாறி வருகிறது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, AIG ஐ அரசுடைமையாக்கியதுதான். இது மக்களின் நலனுக்காக அரசு எடுத்த முடிவு.
ரொம்ப நாள் படம் போட முடியாது அப்படின்னு சந்தை நிலவரம் கூறுகிறது!
நாட்டை அழிக்கச் சொல்லலங்க, அவுங்களுக்க ஒரு பயம் வரமாதிரி எதாச்சும் செய்யனும்!
அத ஏன் பன்னமாட்டேங்குறாங்க??!
மஸ்கிட்டோ மணி சார், நீங்க ரொம்ப பாவம்! :-)
பாத்தீங்களா? இப்பல்லாம், தினமும் வெடிகுண்டு போட்றாங்களாம்!
நாமெல்லாம் என்னைக்கு உண்மையான நிலவரத்தை உணர்ந்து திருந்த நினைக்கிறோமோ அன்னைக்கு வரைக்கும் இப்படித்தான்!
சும்மாவாச்சும், நாங்கல்லாம், வீர இந்தியர்கள்னும், நீங்க குண்டு போட்டா நாங்கல்லாம் பயப்பட மாட்டேன்னும் வீர வசனம் பேசிட்டு இருக்க கூடாது.
இப்படி நாம் பேசரதனாலதான், அரசியல்வாதிகள், நம்ம தலையில நல்லா மிளகாய் அரைக்கிராங்க!
சரி, நடப்பது, நடக்கட்டும்!
Post a Comment