வீதிக்கு வந்த சகோதரர்கள்...
>> Tuesday, 16 September 2008
தமிழ் நாளேடுகளில் இது நாள் வரை வலம் கொண்டிருந்தவர்கள் மாறன் சகோதரர்கள். திடீரென தமிழ் நாளேடுகளில் "லீமென் சகோதரர்கள்" பற்றிய செய்திகள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் அலசப் படும் செய்திகளானது. தமிழக அரசியலில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியவர்கள் மாறன் சகோதரர்கள். ஆனால் உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்தவர்கள் நமது லீமென் சகோதரர்கள். நானும் சிறிது காலத்துக்கு முன்பு(8 மாதங்கள்) முன்பு அங்கு பணி புரிந்தவன் தான். "யானைக்கும் அடி சறுக்கும்" என்ற தமிழ் பழமொழி தான் எனக்கு லீமென் விசயத்தில் ஞாபகத்திற்கு வருகிறது.
உலகின் நான்காவது பெரிய நிதி நிறுவனத்துக்கு வந்த பேரிழப்பை நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறுகிறது. இலண்டன் மாநகரின் கெனரி வார்ஃப் (Canary Wharf) என்னுமிடத்தில் ஓங்கி உயர்ந்த கட்டிடம் தான் லீமென்னுக்கு சொந்தமானது. நான் முதன் முதலில் இலண்டனுக்கு குடி பெயர்ந்த பொழுது இக்கட்டிடதின் அருகில் படுத்து கொண்டு, நின்னு கொண்டு, ரொமாண்டிக் போஸ் கொடுத்து எடுத்த புகை படங்கள் என் மனதை விட்டு அகலா தருணங்கள். ஆனால் சிறிது காலம் (4 வருடங்கள்) கழித்து நானும் அங்கு பணி புரிவேன் என்று நினைத்து பார்க்கவில்லை. இப்பொழுது அந்த வெறிச்சோடிய ஓங்கு தாங்கான கட்டிடத்தை பார்த்தால் எனக்கு விவேக்கின் காமெடி "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!" தான் நினைவுக்கு வருகிறது.
கடைசியாக லீமென் இணையதளத்திற்கு சென்று பார்த்தேன். அந்த இணையத் தளத்தின் வேலை வாய்ப்பு பகுதியில் கீழ்க் கண்ட செய்தி கண்டு அதிர்ச்சியுற்றேன்.
" Around the world, the Lehman Brothers team is growing"
இதைத் தான் எங்க ஊர்ல "கடைய மூடிட்டு கத்திரிக்கா வியாவாரம் பண்றாய்ங்க"னு கூறுவார்கள்.
லீமெனிலில் நான் பணி(???) புரிந்த பொழுது எனது நண்பர்கள் இருவர் பேசிக் கொண்டதும் இப்பொழுது நினைவுக்கு வருகிறது..
நண்பர் 1 : மச்சி, இவன எல்லாம் எப்படி தான் லீமென்னுல சேர்த்தாய்ங்க?
நண்பர் 1 : மச்சி, இவன எல்லாம் எப்படி தான் லீமென்னுல சேர்த்தாய்ங்க?
நண்பர் 2 : இவனெல்லாம் ஏற்கனவே வேலை பார்த்த 5 கம்பெனியெல்லாம் மூடிட்டாய்ங்களே.. லீமென்னுக்கு நேரம் சரியில்ல போல..
நண்பர் 1 : அப்புறம் எப்படிடா இவன் மட்டும் தப்பிச்சுக்கிறான்?
நண்பர் 2: இவன் கம்பெனி விட்டு கம்பெனி ஜம்ப் அடிக்கிறது இவனுக்கு என்னவோ குரு பெயர்ச்சி தான். ஆனா அந்த கம்பெனிக்கு அது தாண்டா சனி பெயர்ச்சி.
நண்பர் 1: ஆமாண்டா, ஆமை புகுந்த வீடும் இவன் புகுந்த கம்பெனியும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை.
நண்பர் 2: ராகு, கேது பெயர்ச்சி மட்டுமில்ல இனிமே புதுசா இந்த சேது பெயர்ச்சியையும் ஜோசியத்துல பார்க்கணும்டா...
3 comments:
கடைசி படத்துல இருக்குற பொண்ணு சூப்பரா இருக்கா! இப்போதான் புரியுது கம்பெனி ஏன் திவாலாச்சுன்னு!!! :-)
கம்பெனியோட சி இ ஓ கைது பன்னி 10 வருஷம் உள்ள வச்சா, எல்லாம் சரியாயிடும்!
பெரிய நிதி நிறுவங்கள் வீதிக்குவரும் பொது பாதிக்கபடுவது என்னவோ பொதுமக்கள் தான் . பங்கு சந்தை இனிமேலாவது புத்துணர்வு பெருமா இல்லை பாதாளம் செல்லுமா பொறுத்து இருந்து பாப்போம் . அடுத்து யார் தெருவுக்கு வர போறாங்க ..................... பொதுமக்களா...............முதலாளிகளா...... காலம் தான் பதில் சொல்லும்.
அதாவது, 10 ரூபா போட்டா, 1000 ரூபாயி மாறிடும் அப்படீங்கிற எதிர்பார்ப்பு(பேராசை)தான் இன்னைக்கு ஏமாற்றத்துல விட்டுருக்கு...
speculation (தமிழ்ல என்ன?) சந்தையை இனிமேலாவது மக்கள் நம்பாமல் உழைத்து சம்பாதித்து மகிழ்ச்சி அடைய முன்வரவேண்டும்.
இல்லையெனில் இதுபோன்ற அபாயங்கள் உலகின் ஒவ்வொரு தெரிவிலும் உலவிக்கொண்டுதான் இருக்கும்.
Post a Comment