குசேலன் ஜோக்ஸ்!!!

>> Thursday, 14 August 2008

ராமு : நம்ம கருடர் டிவில குசேலனை வச்சு புதுசா ஏதோ புரோக்ராம் பண்றாங்களே.. அதோட பேரு என்னடா?
சோமு : ஊத்திக்க போவது யாரு?
********************************************************************************
அங்கவை : 'குத்து' ரம்யாவுக்கும் 'முத்து' ரஜினிக்கும் என்ன வித்தியாசம்?
சங்கவை
: குத்து பார்ட்டி அடிக்கடி டிரஸை மாத்தும்.. முத்து பார்ட்டி அடிக்கடி பேச்சை மாத்துவாரு..

********************************************************************************
ஆசிரியர் : குசேலன் என்ன கொடுத்தாரு?
மாணவி : அல்வா கொடுத்தாரு.
ஆசிரியர் : தப்பு தப்பு!!!.. அவர் அவல் தான் கொடுத்தார்..
மாணவி : நீங்க சொல்றது அந்த காலம். நான் சொல்றது இந்த காலம்.
********************************************************************************
ராமு : கஜினிக்கும் ரஜினிக்கும் என்னடா வித்தியாசம்?
சோமு : தனக்கு மட்டும் மொட்டை போடுறவன் கஜினி.. தமிழனுக்கெல்லாம் மொட்டை போடுறவன் ரஜினி..
********************************************************************************
உளவுத்துறை அதிகாரி1: A1 to A2 calling ஓவர் !!. பொதுவா குசேலன் ஒரு உப்புமா படம்னு பேசிக்கிறாங்க..ஆனா குசேலன் DVD சேல்ஸ் எப்படி ஜாஸ்தியாச்சுனு விசாரிக்க சொன்னேனே.. விசாரிச்சியா?? over..

அதிகாரி 2: A2 to A1 calling ஓவர் !! ... சார்.. அந்த DVD எல்லாம் மொத்தமா பின்லேடன் தான் வாங்குறானாம்.. அவனோட தற்கொலை படை வீரர்களோட மன வலிமை பயிற்சிக்கு குசேலனை தான் யூஸ் பண்றாங்களாம்..ஓவர்!!!
********************************************************************************
ஒரு தூக்கு தண்டனை கைதியிடம் நீதிபதிகள் தூக்கிலிடும் முன் உன்னுடைய கடைசி ஆசை என்ன என்று கேட்டனர். அதற்கு அவன் 'குசேலன்' பார்க்க வேண்டும் என்றான். உடனே நீதிபதிகள் குசேலன் பார்ப்பது தூக்கு தண்டனைக்கு இணையானது என்று கூறி தூக்கு தண்டனையை ரத்து செய்து விட்டனர்..
********************************************************************************
ராமு : ரஜினி ஏன் தமிழ்ல மன்னிப்பு கேக்காம கன்னடத்துல கேட்டாரு??
சோமு : விஜயகாந்துக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு.. அதான் அவரையும் பகைச்சுக்க வேணாம்னு கன்னடத்துல கேட்டாரு..
********************************************************************************
நர்ஸ் : டாக்டர் அந்த பேஸண்ட பேச்சு மூச்சு இல்லாம இருந்தாரே.. அவருக்கு என்ன ஆபரேசன் பண்ணி பேச வைச்சிங்க?
டாக்டர்: ஒண்ணுமில்லை சிம்பிளா "குசேலன்" பேஸண்ட் முன்னாடி போட்டு காட்டுனேன்.. அந்த படத்தை பாக்க முடியாம "நிப்பாட்டு"னு சொல்றதுக்காக வாயை தொறந்து பேசிட்டாரு..
********************************************************************************
பி.கு.:
நம்ம சங்கத்து உறுப்பினர்களுக்கு நாம் அனுப்பிய "குசேலன் ஜோக்ஸ்" பற்றிய மெயில் நமது சங்கத்து பதிவில் பதிவதற்கு முன்பாகவே மதிப்பிற்குரிய "மதுரை மண்ணிற்கு" பெருமை சேர்க்கும் இட்லி வடை கருத்து களத்தில்(http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_12.html) வந்துள்ளது நமக்கு மகிழ்வையே தருகிறது. இட்லி வடைக்கு நமது சங்கத்து மெயிலை அனுப்பிய உறுப்பினருக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

1 comments:

Anonymous 14 August 2008 at 12:00  

romba nalla iruku

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...