காமெடி சீரியல் இல்லீங்க.. இது சீரியல் காமெடி..!

>> Tuesday, 19 August 2008

டாக்டர் : என்ன சார்.. உங்க மனைவி நிறைய சீரியல் பார்ப்பாங்களா..?
கணவர் : ஆமாம் டாக்டர்.. உங்களுக்கு எப்படித் தெரியும்..?
டாக்டர் : உங்க மனைவிக்கு ஆப்பரேஷன் பண்ணி குழந்தையை எடுத்த உடனேயே " ஏய்.. மவளே.. எங்கம்மா வயித்த கிழிச்ச உன்னை எப்படியும் 1024 வாரத்துக்குள்ள பழி வாங்கலே என் பேரு சீரியல் சித்ரா இல்லேன்னு சவால் விடுதே..!
__________________________________________________________________
மாப்ளே 'செல்வி' சீரியல் ஆரம்பிச்சு ஒரு அஞ்சு வருஷம் இருக்குமா..?
இருக்கும் மாமா.. ஏன் கேக்கறீங்க..?
அப்ப ஊர்லேருந்து வந்தீங்க.. இன்னும் கிளம்பலையேன்னு கேட்டேன்..
___________________________________________________________________
எக்.. க்... இக்.. செல்லம்மா சீக்கிரம் தண்ணி கொண்டா..
கொஞ்சம் இருங்க.. விளம்பர இடைவேளை வரட்டும்..!
_________________________________________________________________
உங்க மெகா சீரியலைப் பார்த்ததும் எனக்குள்ளே எத்தனையோ கேள்விகள்..
அத்தனை விழிப்புணர்ச்சி தருதா.. நன்றிங்க..
அட அதில்லீங்க.. இதையெல்லாம் பாத்துக்கிட்டு நாம உயிரோட இருக்கணுமான்னு..!
______________________________________________________________
என்னங்க உங்கம்மா எதாவது சீரியல்ல நடிக்கப் போறாங்களா..?
இல்லியே.. ஏண்டி கேக்கறே..?
அவளை வாழ விடமாட்டேன்.. எப்படி நிம்மதியா இருக்கறான்னு பார்க்கறேன்' ன்னு சொல்லிக்கிட்டு திரியுது..!
_______________________________________________________________
ஏன் அந்தக் கைதி எனக்கு இந்த தண்டனை வேண்டாம்.. அதுக்கு தூக்குல போட்டுருங்கன்னு கதறுகிறான்..?
கோலம் சீரியல் முடியற வரைக்கும் சிறைன்னு நீதிபதி சொல்லிட்டாராம்..
_______________________________________________________________

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...