மன்னிப்பு கேட்ட விஜய டி.ஆர்

>> Wednesday, 27 August 2008

"ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு" கொடுத்த தமிழினத்திற்கு துரோகம் செய்து கன்னட வெறியர்களின் கண்டனத்துக்கு பயந்து மன்னிப்பு கேட்ட சூப்பர் "பல்டி" ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து, நமது கரடியார் விஜய டி.ஆர் ஒரு சுய விளம்பரத்துக்காக அடுக்கு மொழி பேச மாட்டேன் என்று தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்போர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்...

கருணாநிதி பொண்ணு பேரு கனிமொழி!
"கேக்குறவன் கேனயன இருந்தா"னு சொல்லுறது பழமொழி!
இனிமே நான் பேச மாட்டேன் அடுக்குமொழி!

அழகிரி பொண்ணு பேரு கயல்விழி!
எனக்கு புடிக்காத படம் பேரு ஊமை விழி!
(மனதிற்குள் : தலைவரு குடும்பத்தை பத்தியெல்லாம் பேசியாச்சு, கண்டிப்பா நமக்கு ஒரு எம்.பி சீட்டாவது தருவாருல்ல?!!)

தலைவனுக்கு(கருணாநிதி) புடிக்காத இதிகாச நாயகன் ராமு!
எனக்கு புடிக்காத திரை நாயகன் சாமு! (புரட்சி சுனாமி சாம் ஆண்டர்சன்)

வெட்டி பயபுள்ளைக எடுத்த படம் பேரு சரம்..
குசேலனுக்கே அவல் கொடுத்தது சுப்ரமணிய புரம்...

மதுர
காரய்ங்க என்கிட்ட பண்ணுனது ராவடி!
மறக்க முடியுமா அந்த காமெடி?

என்னோட பையன் பேரு சிம்பு!
அம்மா நயனு செத்த அவன நம்பு!

அடுத்து வராண்டா குறளு!
எனக்கு எதிரா எவண்டா கொடுக்க முடியும் குரலு?

சின்ன புள்ளங்களுக்கு புடிச்சது மத்தாப்பு!
பொண்டாட்டிய கரெக்ட் பண்ண வாங்குங்க ஒரு முழம் மல்லிப்பூ!
சார் இந்த டி.ஆர் உங்ககிட்ட கேக்குறான் மன்னிப்பு ! மன்னிப்பு ! மன்னிப்பு !

0 comments:

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...