அமெரிக்க அதிபர் புஷ் பேட்டி - வடிவேலு
>> Monday, 18 August 2008
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வைகைப்புயல் வடிவேலு நம்முடைய வெண்ணெய் டி.வி. யில் பேட்டி கொள்கிறார்.
வடிவேலு: "அண்ணே வணக்கம்ணே, ரொம்ப சந்தோசமா இருக்குண்ணே"
புஷ்: "வணக்கம், என்னை கூப்டு இந்த வெண்ணெய் டி.வி. யில் பேட்டி எடுக்குறதுக்கு நன்றி."
வடிவேலு: "அண்ணே ஈராக்ல போயி ஒங்க ஆளுங்க சண்டை போட்றாங்களாமே, ஏண்ணே"?
புஷ்: "நாங்க சண்டை போட போகல, மேற்காசியால உள்ள மக்கள், அமெரிக்க மாதிரி நம்ம ஊரு இல்லையேன்னு வருத்தப்பட்டாங்க. அதனாலதான், அந்த ஊர அழிச்சிட்டு, அத அமெரிக்காவா மாத்திட்டு இருக்கோம்"
வடிவேலு: "அதுக்கு ஊரையே அழிக்கனுமா?!"
புஷ்: "அப்பதானே நெறய அமெரிக்கா மக்களை அங்க போயி ஒக்கார வச்சி மீதி இருக்கிற எல்லா நாட்டையும் மாத்த முடியும்."
வடிவேலு: "நீங்க அந்த நாட்டுக்கு போறத பத்தி வேற மாதிரி பேசுறாங்களே?!"
புஷ்: "என்ன எண்ணெய் எடுக்க போறாங்கன்னு சொல்றாங்களா? ஆமாம், இந்த வெண்ணெய் டி.வி. காரைய்ங்களே இப்படித்தான் கேள்விய நேராவே கேட்க மாட்டாய்ங்க"
வடிவேலு: "ஆஹா, எண்ணெய்க்குதான் இத்தனை கொலை வெறியா?"
புஷ்: "இதுக்கு பேரு கொலை வெறியில்ல, அமெரிக்க மக்களுக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவி"
வடிவேலு: "அதான் ஒங்க அப்பா ரொம்ப நாளைக்கு முன்னாடி செஞ்சாரே, நீங்களுமா?"
புஷ்: "அவருக்கு வயசாச்சி, உலகத்துல இன்னும் நெறய நாட்ல நல்லா இருக்காய்ங்க, அவுங்கள பாத்துகிட்டு சும்மா இருக்க முடியுமா?, வயிறு எரியுதுல்ல"
வடிவேலு: "ஏண்ணே, ரஷ்யா, ஜார்ஜியா சண்டை போட்ராங்களாமே, எதாச்சும் தெரியுமா?"
புஷ்: "எங்கடா கேக்கலேயேன்னு பாத்தேன்... ரஷ்யா உடனே சண்டையை நிறுத்தனும். ஒரு சின்ன நாட்டு மேல குண்டு போட்றது பெரிய நாட்டுக்கு அழகில்ல"
வடிவேலு: "போதும் நிறுத்து... நீயும் ஒங்க அப்பனும் சேர்ந்து ஒரு நாடு இருந்ததுக்கான அடையாளமே இல்லாம ஆக்கிட்டீங்க, நீ பேசிறியா மத்தவங்கள பத்தி"
வடிவேலு: "சரி, 8 வருஷம் ஜனாதிபதியா இருந்தீங்களே, அத பத்தி என்ன நினைக்கிறீங்க?"
புஷ்: "இன்னும் ஒரு 8 வருஷம் இருந்தா அமெரிக்காவ தவிற மத்த உலகத்தை அழிச்சிடுவேன். ஆனா, என்னால அடுத்த தேர்தல்ல நிக்க முடியாது"
வடிவேலு: "சின்னபுள்ளத்தனமா இருக்கே, வேண்டாம்யா"
புஷ்: "ஈரானுக்கு சொல்றேன், சிரியா, கொரியா எல்லாத்துக்கும் சொல்றேன், அமெரிக்கா சொல்றத ஒழுங்கா கேட்டு நடந்தா சரி, இல்ல, குண்டை போட்டுட்டு போயிடுவோம்"
வடிவேலு: (தலையை கீழே குணிந்து) "அடப்பாவி ஏன்யா இப்படி கொலை வெறியோட அலையிறீங்க"
வடிவேலு: "போதும்யா, நான் அழுதுடுவேன்..., பேட்டி போதும் கேமராவ ஆஃப் பன்னுங்கய்யா...!"
2 comments:
வடிவேலு: "சரி, 8 வருஷம் ஜனாதிபதியா இருந்தீங்களே, அத பத்தி என்ன நினைக்கிறீங்க?"
புஷ்: "இன்னும் ஒரு 8 வருஷம் இருந்தா அமெரிக்காவ தவிற மத்த உலகத்தை அழிச்சிடுவேன். ஆனா, என்னால அடுத்த தேர்தல்ல நிக்க முடியாது"
வடிவேலு: ஏண்ணே!
புஷ்: மூணாவது டேர்முக்கு கான்ச்டிடூஷனில் இடமில்லை
வடிவேலு: உங்க ரெண்டாவது டெர்ம் கூடத்தான் அன்கான்ஷ்டிடூஷனல். அதற்காக நாற்காலிய உட்டு எரங்கிட்டிங்களா என்ன? சும்மா நில்லுங்கன்னே இன்னொரு வாட்டி.
சரியா சொன்னீங்க மோகன் கந்தசாமி!
வருகைக்கு நன்றி!
Post a Comment