கலியுக ஜாதகம் - கடன் அறிக்கை(credit report), சம்பளச் சான்றிதழ் (pay slip)

>> Thursday, 21 August 2008

இது கதையல்ல உண்மை!

என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பருக்கு 2 வாரங்களுக்கு முன் ஒரு பெண் பார்த்தார்கள்.

அந்த பெண் முதுகலை (PG) படித்திருப்பதாகவும், சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறினார் என் நண்பர்.

மாப்பிள்ளை அமெரிக்காவில் இருப்பதால், அவரும், பெண்ணும் அவரவருடைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.

மாப்பிள்ளைக்கு பெண்ணின் புகைப்படம் பிடித்திருந்தது, பெண்ணுக்கும் மாப்பிள்ளையின் புகைப்படம் பிடித்திருந்தது.

மாப்பிள்ளை வீட்டார்கள், மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் ஜாதகங்களை ஒப்பிட்டு, ஜோசியக்காரரிடம் இருந்து நற்சான்றிதழ் பெற்றுவிட்டார்கள்.

மாப்பிள்ளை, பெண்ணை அவரது கைத்தொலைபேசியில் தொடர்புகொண்டு முன்னுரை கொடுத்தார்.

இதற்கிடையில் பெண்ணின் நெறுங்கிய உறவினர்கள் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவர்கள் மாப்பிள்ளையை தொடர்புகொண்டு பேசுவார்கள் என்றும் என் நண்பருக்கு தகவல் தெறிவிக்கப்பட்டது.

பெண்ணின் பெரியப்பா மகன் ஒருவர் மாப்பிள்ளையை தொடர்புகொண்டு, அவரைப்பற்றி விசாரித்துள்ளார். அவரின் முதல் தொடர்பின் போது கேட்ட கேள்விகள்...

1. நீங்கள் எங்க வேலை பார்க்கிறீர்கள்?
2. உங்களுடைய சம்பளம் எவ்வளவு?
3. உங்களின் வங்கி நிலுவைத்தொகை எவ்வளவு?
4. இதுவரை சம்பாதித்து என்ன சேர்த்து வைத்துள்ளீர்?

மறுநாள் இதைப்பற்றி நண்பர் என்னிடம் கூறும்போது எனக்கு கடும் கோபம் வந்தது. இருப்பினும் நண்பர் அது பரவாயில்லை என்று வாதிட்டார்.

இதற்கிடையில், நண்பரின் வீட்டிலிருந்து அவருக்கு இன்னொரு தகவலும் வந்தது. பெண்ணின் பெரியப்பா மகனை நேரில் சென்று (வாஷிங்க்டன் டி சி), பார்த்து வரும்படி கூறினார்கள்.

இந்த வார இறுதியில் வாஷிங்க்டன் டி சி சென்று வர திட்டம் தீட்டினார் நண்பர். என்னையும் அழைத்தார். வீட்டில் இருப்பதைவிட அவரோடு சென்று வரலாமென நினைத்து அவரது அழைப்புக்கு ஒப்புதல் தெறிவித்தேன்.

2 நாட்களுக்கு முன் அந்த பெண்ணின் "பெரியப்பா மகன்" நண்பரை தொடர்புகொண்டு, அவர் டெக்சாசில் இருப்பதாகவும், இந்தவாரம் பார்க்க இயலாது என்றும் தெறிவித்துள்ளார்.

அத்தோடு மட்டுமல்லாமல், நண்பருடைய, 3 மாதங்களுக்கான சம்பள ரசீதையும் (pay slips for last 3 months) கேட்டுள்ளார்.

அப்போதுதான் நண்பருக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது. அடுத்த வார்த்தை பேசாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்துள்ளார்.

அன்றிரவு நண்பர் தூங்கவில்லை ! (எதிர்பார்த்ததுதான்)

மறுநாள் காலை என்னிடம் ஓடி வந்து நடந்ததை கூறினார். என்ன செய்வதென்று தெறியாமல் இருந்தார்.

"நான் மாப்பிள்ளை வேலை தேடவில்லை, எனக்கு இருக்கின்ற வேலை போதும், உங்கள் வீட்டு வேலை தேவையில்லை!" என்று கூறிவிடுங்கள் என்று கூறினேன்.

அதைத்தான் செய்யப்போகின்றேன் என வழிமொழிந்தார். அதை செய்தும் முடித்தார்.

ஒரு ஆண், அல்லது பெண்ணிடம் அவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்று கேட்கலாம். அப்பணி நிரந்தரமா? அல்லது ஒப்பந்தப்பணியா என்றும் கேட்கலாம்.

ஆனால், அதையும் தாண்டி, சேமிப்பு வைப்புநிதி எவ்வளவு? சம்பளச்சான்றிதழ், கடன்றிக்கை போன்றவைகளை கேட்பது கலிகாலமல்ல, எதிர்காலத்திலும் நம் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல!

11 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar 22 August 2008 at 05:26  

அநாகரிகம், பேராசை தான். ஆனால், வெளிநாட்டில் உள்நாட்டில் பெரிய வேலை செய்வதாக சொல்லும் டுபாக்கூர் மாப்பிள்ளைகள் இருக்கையில் பெண்ணைக் கொடுப்பவர்களின் நியாயமான கவலையாகவும் இருக்கலாம்.

சப்பானி 22 August 2008 at 11:40  

நன்றிகள் ரவிசங்கர், ஆனால், பெண் வீட்டார், மாப்பிள்ளையின் நடத்தை, அவர் உண்மையிலேயே பணியில் இருக்கின்றாரா? போன்றவற்றை மாப்பிள்ளையை நேரில் வரவைத்து அறிந்து கொள்ளலாம் அல்லது, மாப்பிள்ளையின் இடத்திற்கு சென்றும் கூட விசாரிக்கலாம். அதற்காக, pay slip ம், credit report ம் ரொம்ப அதிகம்!

Adaengappa !! 24 August 2008 at 11:42  

I feel sorry for your friend..Hopefully he finds a better soulmate who loves only her husband and not otherwise..

Good Luck !

Btw, Your blogposts are too good..!

சப்பானி 24 August 2008 at 16:17  

//I feel sorry for your friend..Hopefully he finds a better soulmate who loves only her husband and not otherwise..//

நான் என்னத்தங்க சொல்றது??

ஒங்க வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!

//Btw, Your blogposts are too good..!//

ரொம்ப ரொம்ப நன்றிங்க!!!

அடிக்கடி வாங்க!

Shekar 2 September 2008 at 09:30  

இந்த மாதிரி நடப்பவை பெண் வீட்டாரின், அநாகரீகத்தையே காட்டுகிறது. பெண் வீட்டார், மாப்பிள்ளை, எந்த வேலையில் உள்ளார், எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை அறியவும், அதை உறுதிப்படுத்தவும், உரிமை இருக்கிறது என்பதை, நான் மறுக்கவில்லை. அதை, மிகவும், நாகரீகமான முறையில் செய்ய, பல வழிமுறைகள் உள்ளது. அதையெல்லாம் விடுத்து வேலைக்கு ஆள் எடுப்பது போல செய்வது, மிகவும், அநாகரீகம்.

இதையே, ஒரு மாப்பிள்ளை வீட்டார், பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டாலோ, இல்லை, பெண்ணின், நடத்தையின்பேல் கேள்விகள் கேட்டாலோ, இந்த சமுதாயமே கொந்தளிக்கும். ஆண்கள்தான், இந்த மாதிரி ஏமாற்றுக்காரர்கள் என்று பட்டம் கட்டுவது, மிகவும் மூட நாகரீகம், மற்றும், அறியாமையே. எனக்குத் தெரிந்த சில நண்பர்கள், திருமணம் முடிந்தபின், பெண்களால் ஏமாற்றப்பட்டு, பெரும் சோகத்திற்க்கு ஆளாகியிருக்கிறார்கள். உதாரணத்திற்க்கு, இங்கு ஒருவரின் மனைவி, திருமணம் ஆகி வந்த மூன்றாம் நாளே, கணவனிடம் நான் உங்களைத் திருமணம் செய்துகொண்டதின் காரணமே, இங்கிருக்கும் என் காதலனுடன் சேர்வதற்க்குதான் எண்றும், அவரின் குடும்பம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாதனால், விசா வாங்க வழியில்லாமல், இந்த திருமணத்தை செய்துகொண்டு, இங்கு வந்தபின், அவனுடன் செல்ல திட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த மாதிரி பெண்களைப் பொருத்து நடைபெறும் விஷயங்களெல்லாம் ஆயிரத்தில் ஒன்று என்றால், ஆண்களைப் பொருத்து நடைபெறும் விஷயங்களும், அவ்வாறே. நான் எந்த ஒரு இனத்தையும், தனித்து குறைகூற எண்ணவில்லை. தீரவிசாரித்து திருமணங்களை முடிவு செய்வது மிகவும் நன்மையே. ஆயினும், என்னுடைய கருத்து, விசாரிப்பது என்பதற்க்கு, ஒரு முறை உள்ளது. அதன் வழி நடப்பது, யாவருக்கும், மனத்தாங்கலைக் கொடுக்காது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்.

அன்புடன்,
சந்திரசேகரன்

Anonymous 3 September 2008 at 08:18  

I completely agree with sekar.

There are many other decent ways to collect this information. Even law says you are innocent until proven guilty.

So there is no need for someone to give the records to prove that they are true.

சப்பானி 3 September 2008 at 09:33  

நன்றிகள் சந்திரசேகரன்!

நீங்கள் கூறியதுபோல் ஆயிரத்தில் ஒன்றல்ல, அதிகமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இவ்வளவு புலனாய்வுகளுக்குப் பிறகும் ஆண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்த தளத்தை பாருங்கள்.

http://www.498a.org/

அடிக்கடி வாங்க !

சப்பானி 3 September 2008 at 09:37  

நன்றிகள் ராஜ், சிலறது எண்ணங்கள் சற்றே மாறுபட்டவை. அதுவும் தமிழன் வெகுவாகவே உணர்ச்சி வசப்பட்டவன். சில நேரங்களில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் இப்படி நடந்து விடுகிறது. ஆனால் இந்த சம்பவத்தில், பெண்ணும் அல்லாது, பெண்ணின் பெற்றோரும் அல்லாது, பெரியப்பா மகன் பேஸ்லிப் கேட்டது அதிர்ச்சியுண்டாக்கியது!

அடிக்கடி வாங்க இன்னும் எழுதுறோம் படிங்க...!

Shekar 3 September 2008 at 15:22  

ஐயா: என்னால் முடிந்த காரியம், நான் இந்த 498 தளத்தை படித்தபின், எனக்குத் தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்துவிட்டேன். இந்த 498 என்ற சட்டத்தைப் பற்றி எனக்கு, இதற்கு முன் தெரியாது. ஆனால் இப்போது தெரிந்துகொண்டேன், மற்றவர்களுக்கும், தேவைப்படும்போது, கண்டிப்பாக தெரிவிக்க முயல்வேன்.

அன்புடன்,
சந்திரசேகரன்.

சப்பானி 3 September 2008 at 15:34  

//இப்போது தெரிந்துகொண்டேன், மற்றவர்களுக்கும், தேவைப்படும்போது, கண்டிப்பாக தெரிவிக்க முயல்வேன்//

சேகர்ணா, ரொம்ப நன்றிங்கண்ணா...! :-)

Sri 15 September 2009 at 05:47  

Sounds familiar. Happened to one of my friends too and he asked them to get lost too.

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...