மிஸ்டர்.மொக்கை ஜோக்ஸ்

>> Tuesday, 19 August 2008

திருமதி. மொக்கை தோழியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்..
"என் பக்கத்து வீட்டு பத்மா இருக்காளே.. சுத்த மோசம்.. தன் புருஷனை இப்படியா கேவலமா பேசுவா..? இப்போ என்னையே எடுத்துக்கோ.. என் புருஷன் சுத்த மொக்கை. ஒன்னுக்கும் புண்ணியமில்லாதவர்.. வடிகட்டின முட்டாள்... சரியான வேஸ்ட்.. ஆனா நான் என்னிக்காவது, அவரைப்பற்றி யார்கிட்டயாவது தப்பாச் சொல்லியிருக்கேனா..?
_________________________________________________________________

மிஸ்டர்.மொக்கை தன் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தார்..
நான் அப்பா ஆகப்போறேண்டா..!
கங்கிராட்ஸ் மொக்கை.. அதை ஏன் இவ்வளவு வருத்தத்தோட சொல்றே..?
பயமா இருக்குடா.. இந்த விஷயம் இன்னும் என் மனைவிக்கு தெரியாது..!
_________________________________________________________________
மொக்கையும், தண்டபாணியும் மரம் அறுக்கும் மில்லில் வேலை செய்தார்கள். ஒருநாள் (தண்ட)பாணி, தவறுதலாக சுழலும் வாளுக்குள் கையை விட்டுவிட்டான். கை துண்டானது. மொக்கை உடனடியாக, ஒரு பாலிதீன் கவரில் வெட்டுண்ட கையைப் போட்டு, பாணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மறுநாள் பாணியைப் பார்க்க போனபோது, அவன் படுக்கையில் இல்லை. மொக்கை செவிலியிடம் விசாரித்தார்.
"தோட்டத்தில் பூப்பறிச்சுகிட்டு இருக்கார்" என்று செவிலி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாணி உள்ளே பூக்கூடையுடன் வந்தான். வெட்டுண்ட கை சரியாக ஒட்டியிருந்தது.
மறுநாளே பணிக்குத் திரும்பிய பாணி, கவனக்குறைவாக காலை ரம்பத்துக்குள் விட்டுவிட்டான். மொக்கை முன்போலவே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மறுநாள் போனபோது, பாணி மூன்றாவது மாடிக்கு ஒரு நோயாளியை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்தார்.
மீண்டும் வேலைக்கு வந்த பாணி, இம்முறை தலையை வெட்டிக்கொண்டுவிட,மீண்டும் மொக்கை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மறுநாள் பார்ப்பதற்காக போனார். பாணி படுக்கையில் இல்லை.
செவிலியிடம் மொக்கை கேட்டார்..
"எங்கே என் நண்பன் பாணி..? கல் சுமக்க போயிருக்கிறானா..?
"இல்லே.. செத்து பூட்டான்..!'
"அய்யோ.. எப்படி..?"
"நேத்து அவன் தலையை எவனோ ஒரு முட்டாள் பாலிதீன் பையில் சுற்றி எடுத்து வந்திருக்கிறான்.. வரும்போதே மூச்சுத் திணறி செத்துப் போயிட்டான் போல..!"
_________________________________________________________________

5 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) 20 August 2008 at 10:00  

nalla irukku

Anonymous 20 August 2008 at 22:36  

:))))
சூப்பரு

Anonymous 21 August 2008 at 11:24  

neenga mattum epdi ipadi ellammmmmmmmmmmmmmmmmmmmmmm........
u always make everyone laugh..
so Long Live 100 years!!!!!!

பாசக்கார பயபுள்ள... 21 August 2008 at 12:59  

நண்பர்கள் சாமான்யன், சுபாஷ், அனு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!!!

நகைச்சுவை-அரசர் 29 August 2008 at 07:47  

ரொம்ப அருமையா இருக்குங்க.. நீங்களே யோசிச்சதா இது..?
அப்படின்னா நீங்க திறமைசாலிதான்..!

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...