மஞ்சளாடை மாவீரர்

>> Friday, 29 August 2008

சமீப காலமா பல பேரு பத்திரிக்கைகளில் கவிதை எழுதி மற்றவங்கள தாக்கிட்டு இருக்காங்க.. ஏன் நாமலே ஒரு கவிதை எழுத கூடாதுனு குப்புற படுத்து யோசிச்சேன். உடனே திரும்பி மல்லாக்க படுத்து ஒரு கவிதை தீட்டினேன் பாருங்க ... (நீங்களெல்லாம் நல்லாருக்குனு சொல்லுவீங்கனு எதிர்பார்த்து ஒரு சுய விளம்பரம் தான்)

மஞ்சள் வஸ்திரம் தரித்து மானம் காத்த மாவீரராம்.
மானாட மயிலாட கண்டு மனம் மகிழ்பவராம்.

"பாளையங்கோட்டை சிறையினிலே" என்று அஞ்சாமல் பரணி பாடியவராம்
பாலகனை போல் சென்னை சிறைக்கு அஞ்சி புரணியில் புலம்பியவராம்.

நாக்குமுனியில் நாத்திகம் பேசுபவராம்.
நாராயணீ பீடத்தில் நாள் முழுக்க தவம் புரிந்தவராம்.

ஊருக்கு (மதுரை, காடுவெட்டி) ஒரு நீதி சொன்னவராம்.
உலகிற்கு இவர் தான் சமூக நீதி காவலராம்?.

அவாள், இவாள் என்று இனம் பிரித்து குணம் பார்ப்பவராம்.
அப்படி இனம் பிரித்தே நமது இனத்திற்கே தலைவனானவராம்.

சேது சேது என்று பாலத்திற்காக கேது போல் கலகம் விளைவித்தவராம்.
சமதர்ம ராம் இல்லையேல் சேது இல்லை என்ற ராம பலம் தெரியாதவராம்.

பசுவிற்காக மகனை கொன்ற மனுநீதி சோழன் மண்ணில் பிறந்தவராம்.
பத்திரிக்கை எரித்து பல உயிரை பறித்த மக(ன்) நீதி சோழராம்.

திரைப் பட விழாக்களே கதியென்று தமிழனின் நேரத்தை வீணாக்கியவராம்.
திரை மறைவு தந்திரம் பல புரிந்து அணி பிரிக்கும் அரசியல் சாணக்கியராம்.

விலைவாசி உயர்வினால் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வில் தான் எவ்வளவு பாரம்?.
விதியை நொந்து உலகை காக்க உனை அழைக்கிறேன் ராம்!.. ஹே ராம்!!!...

4 comments:

Anonymous 3 September 2008 at 08:24  

கலைஞருக்கே கவிதையா? கலக்கறீங்க போங்க

சபாஷ் சரியான போட்டி!!

சப்பானி 3 September 2008 at 09:45  

சொல்லனும்னு நினைச்சேன், நல்லா இருக்கு! இத படிக்க வேண்டியவங்க படிச்சா, நான்தான் தமிழன் னு சொல்லமாட்டாங்க!

சூப்பர் அடிச்சி ஆடுங்க...

வயசுபசங்க நாங்க ! 12 September 2008 at 07:13  

அட இம்புட்டுதானா மேட்டர் வர தேர்தல அரிசி இனமா கொடுப்பாக அதயும் வாங்கி கிட்டு ஒட்டு போடும் நம்ம மனுசகல என்னனு சொல்ல ...

pesum vizhiyaal 24 May 2010 at 04:28  

kuppura paduthu yosichingala?????!!!!
summa solladhinga,
room potu yosuchu eludhi irukinga.

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...