சிரிங்கப்பு சிரிங்க!!!..

>> Friday, 15 August 2008

"புதுசா வந்திருக்கிற கைதி பேங்க்ல கேஷியரா இருந்தவன்."
"எனக்குத் தெரியும்?"
"எப்படி?"
"எச்சைத் தொட்டு கம்பி எண்றானே!"
*************
"அந்தக் கிளி ஜோசியர் சொல்லும் பலன்கள் எல்லாம் மனுஷன் பயந்து சாகிற மாதிரி இருக்கும்."
"அப்ப 'கிலி' ஜோசியமுன்னு சொல்லு!"
*************
"அந்த டிராபிக் சார்ஜண்ட் எதுக்கு சாமியாரை கைது பண்ணினார்?"
"அவர் லைசன்ஸ் இல்லாம பேய் 'ஓட்டினாராம்!"

*************
"சொத்துக் கணக்கு கேட்டதுக்கு அந்த அரசியல்வாதி, அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை கோர்ட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்காரே... ஏன்?"
"படிக்கிற காலத்திலேயே இவருக்கு எந்தக் கணக்கும் தெரியாதுன்னு சாட்சி சொல்லத்தான்."

**************
"என்னய்யா, மஞ்சள்காமாலைக்கு இன்னும் பத்திய சாப்பாடுதான் சாப்பிடறியா?"
"எனக்கு எப்ப சார் வந்தது மஞ்சள்காமாலை?"
"மாட்டிக்கிட்டியா... போன வாரம் நீ போட்ட லீவுக்கு அதுதான் காரணம்னு உன் டாக்டர் சர்டிபிகேட்ல எழுதி இருந்தாரே...!"

**************

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...