கங்குலி As கைப்புள்ள

>> Tuesday, 13 May 2008

கங்குலியின் அ.பொ: தல தல டெஸ்ட் மேட்சிலும் நீங்க கேப்டன் இல்லனு அந்த சேப்பல் சொல்லவச்சுட்டார்.

கங்குலி : எனக்கு ரிவிட்டு அடிக்கிறதே சேப்பலுக்கு வேலையா போச்சு. இன்னிக்கு போர்டு மீட்டிங்குல இந்த கங்குலியா ...சேப்பலானு முடிவு செய்யறேன்டா........எடுடா அந்த பேட்ட, மாட்டுடா அந்த ஹெல்மட்ட...(கங்குலியும் அவர் குழுவும் கோபமாய் செல்வதை பார்த்து...)

திருவாளர் பொதுஜனம் : அய்யோ கங்குலி பேட்ட எடுத்துட்டு கெளம்பிட்டாரே... இன்னிக்கு எத்தன சிக்ஸ் அடிக்க போறாரோ.. தெரியலேயே ....
(தேர்வுக்குழுவுக்கான அறைக்கு சென்றவுடன் கங்குலி பேட்டை குறுக்காய் வைக்கிறார்)
கங்குலி : இந்த பேட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது நானும் வரமாட்டேன். பேச்சு பேச்சா இருக்கனும். எனக்கு டெஸ்ட் மேட்சிலே கல்தா கொடுத்தவன் எவண்டா??
சேப்பல்: என்ன கொஞ்சம் சத்தமா....இங்க வந்து சொல்லேன்...
கங்குலி : நான் அங்க வரமாட்டேன். என் அ.பொ விடம் சொல்லிவிடறேன்.

கங்குலியின் அ.பொ: சரி தல......., எவண்டா எங்க தலைய ஒரம் கட்டினது???கங்குலி : ஏய் கிரெக். நீ மட்டும் ஒரு நல்ல கிரிக்கெட்டரா இருந்தா எனக்கு நல்ல பவுன்சர் போடு பார்க்கலாம்.
( சேப்பல் உடனே 200 கி.மீ வேகத்தில் பவுன்சர் வீச கங்குலின் பேட் துண்டாகி ரெண்டாகிறது )
கங்குலி : ஒத்துக்கிறேன். நீ ஒரு நல்ல கிரிக்கெட்டரனு ஒத்துக்கிறேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன்.
( சாப்பலும், தேர்வுக்குழு உறுப்பினர்களும் கங்குலியை சுற்றிவளைக்கிறார்கள் )
கங்குலி : உங்களாலாம் பார்த்த எனக்கு பாவமா இருக்கு. நான் இதுவரைக்கும் எந்த மேட்சிலும் டக் அடிச்சதில்லை
தேர்வுக்குழு உறுப்பினர்கள்: போன சீரியஸ்லதானே எல்லா மேட்சிலும் டக் அடிச்சே
கங்குலி : அது போன சீரியஸ். நான் சொல்றது இந்த சீரியஸ்ல. நான் இப்ப நெட் பிராக்டிஸ் போறேன், ஆனா டீமுக்கு திரும்பி ...
சேப்பல்: திரும்பி ...
கங்குலி : வர மாட்டெனு சொல்ல வந்தேன்.
சேப்பல்: இதப்பாரு ..இனிமேல் நடக்கப்போற எந்த மேட்சிலும் உன்ன சேத்துக்க போறதில்ல
கங்குலி : வேணாம்.
சேப்பல்: பங்காளதேஷ் டீம்னா கூட உனக்கு இடம் கிடையாது
கங்குலி : வலிக்குது
தேர்வுக்குழு உறுப்பினர்கள்: ரஞ்சி கோப்பைனா கூட நீ 13வது ஆள்தான்.
கங்குலி : அழுதுடுவேன்
சேப்பல்: ஏன் தெருவில ஆடுற கிரிக்கெட்ல கூட நீ சூப்பர் சப்ஸ்டுட்டுக்கு எடுபிடிதான்.
கங்குலி : அழுதுடுவேன் ... அழுதுடுவேன்

( கங்குலி சோகத்துடன் தன் உடைந்த பேட்டுடன் கொல்கத்தா திரும்புகிறார்)திருவாளர் பொதுஜனம் : அடேங்கப்பா... கங்குலியோட பேட்டே உடைஞ்சு போச்சுனா பவுலிங் போட்டவன் இன்னும் டீமுல இருப்பாங்கிறே??
கங்குலி: இன்னுமடா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டுயிருக்கு...
கங்குலி அ.பொ: அது அவங்க தலைவிதி தல.....



"உலகம் தெரியாம வளர்ந்த புள்ள வெகுளி
கிரிக்கெட் தெரியாம வளர்ந்த புள்ள கங்குலி"

0 comments:

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...