வடிவேலுவாக மாறிய ஹர்பஜன்சிங்!!!

>> Friday, 9 May 2008

வடிவேலுவாக மாறிய ஹர்பஜன்சிங்!!!ஹர்பஜன்சிங் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஹர்பஜன்சிங் விவகாரத்தில் நடந்த விசாரணையில் யாரும் அறியாத சில ரசிக்கத்தக்க(!) தகவல்களை இப்பகுதியில் கொடுத்துள்ளேன்! ரகசியமாக இருக்கட்டும்!!-----------------------------------------------------------------------------------------------நீதிபதி: நீ சைமெண்ஸ திட்டுனியா?ஹர்பஜன்சிங்: என்ன திட்டுனியா?!
நீதிபதி: ஏப்பா, நீ சைமெண்ஸ திட்டுனியா இல்லியா?
ஹர்பஜன்சிங்: என்ன திட்டுனியா இல்லியா?!
நீதிபதி: ஏப்பா பாண்டிங்கு, நான் சரியாதானப்பா கேக்குறேன்?
ஹர்பஜன்சிங்: என்ன சரியாதானப்பா கேக்குறேன்?!
நீதிபதி: சொன்னதயே திரும்பத் திரும்ப பேசுற நீ!
ஹர்பஜன்சிங்: என்ன திரும்பத் திரும்ப பேசுற நீ?!
பாண்டிங்: நீதிபதிய கலாய்ச்சா பார்த்துக்கிட்டு நாங்க சும்மா இருக்க மாட்டோம்.
ஹர்பஜன்சிங்: சும்ம எதுக்கு இருக்குற? கைல பேட்டத் தூக்கிக்கிட்டு அலைய வேண்டியது தான?!
பாண்டிங்: இப்ப கரெக்டா பதில் சொல்றான் சார்! இப்போ கேளுங்க!
ஹர்பஜன்சிங்: என்ன இப்போ கேளுங்க?!(இதைப்பார்த்துக்கொண்டே இருக்கும்போது சைமெண்ஸ் முகத்தில் கடுப்பேறுகிறது)
சைமெண்ஸ்: டேய், உன்னை கிரவுண்டுலயே போட்டிருக்கணும். இவ்ளோ தூரம் உன்னைப் பேச விட்டது தப்பு!
ஹர்பஜன்சிங்: ஏய்! ஸ்டாப் இட் மேன்! நீ மட்டும் இவ்ளோ தூரம் முடிவளர்த்து சடை போட்டிருக்கியே, உன்னை எதாவது கேட்டமா?(உடனே சைமெண்ஸ் அடிக்கப் பாய்கிறார். தெண்டுல்கர் குறுக்கே விழுந்து தடுக்கிறார்.
ஹர்பஜன்சிங் உடனே நீளமான கோடு ஒன்றைக் கிழிக்கிறார்!)
ஹர்பஜன்சிங்: இந்த கோட்டைத்தாண்டி நீயும் வரக்கூடாது... நாங்களும் வரமாட்டோம்! பேச்சு பேச்சோட இருக்கணும்!
சைமெண்ஸ்: கோட்டைத்தாண்டி அந்தப் பக்கம் வந்தா?
ஹர்பஜன்சிங்: வந்தா நீயும் எங்க பக்கம் இருப்ப! என்ன இது சின்னப்புள்ளத்தனமா?
தெண்டுல்கர்: பாஜ்ஜி அவனுங்கள கலாய்ச்சது போதும். விட்டுடு.(மீண்டும் நீதிபதி கேட்கிறார்)
நீதிபதி: இப்போ சொல்லு, நீ சைமெண்ஸ திட்டுனியா?
ஹர்பஜன்சிங்: ஆமா திட்டுனேன்!
நீதிபதி: எதுக்கு இவனை திட்டுன?
ஹர்பஜன்சிங்: நீங்களே பாருங்க இவனோட தலைய! எங்க "தல"யே தன்னோட கூந்தல 'கட்' பண்ணிட்டு அமைதியா இருக்குறப்ப இவனுக்கு இது தேவயா?நீதிபதி: இதுக்கு தோனி தான கோபப்படணும்? உங்களுக்கு எதுக்கு கோபம் வருது?
ஹர்பஜன்சிங்: பெரிய மனுஷன் கேக்குற கேள்வியாய்யா இது? என்னோட தலைய பாருயா! எப்படி அடக்கமா மூடிப்போட்டு இருக்குறேன்! இவன் என்னடான்னா இப்படி பப்பரப்பான்னு விரிச்சிப் போட்டுக்கிட்டு இருக்கானே!!! கம்பளிப்பூச்சி மாதிரி முடியத்தொங்கப் போட்டுக்கிட்டு பேட்டிங் பண்ணினால் எவனுக்குதான்யா பந்து போட மனசு வரும்?!!
நீதிபதி: அதுசரி, இவரப் பார்த்து குரங்குன்னு எதுக்கு சொன்ன?
ஹர்பஜன்சிங்: யோவ்! இதெல்லாம் ஒரு வசவா? எங்க ஊருப்பக்கம் வந்து பாரு! கவுண்டமணி,கவுண்டமணின்னு ஒரு அண்ணண் இருக்காரு! அவரு வய்யாத வசவாய்யா?
நீதிபதி: அப்படி என்ன திட்டிட்டாரு?
ஹர்பஜன்சிங்: போடா கோமுட்டித்தலயா! அடுப்பவாயா! நாறவாயா! தீச்சட்டித்தலயா! மொள்ளமாரி... (இப்படியே விடாமல் திட்டிக்கொண்டேபோக... இறுதியில் நீதிபதி காதில் ரத்தம் வழிகிறது!)
சைமெண்ஸ்: பிளட்! சேம் பிளட்!(நீதிபதி கண்ணீர் விடுகிறார்!)
ஹர்பஜன்சிங்: ஏய்! என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?! விடு, விடு, இதுக்குத்தான் விசாரணை வைக்காதீங்கடானு பலதடவை சொன்னேன்! கேட்டால் தான!!
(இறுதியில், வேறு வழியில்லாமல் ஹர்பஜன்சிங் மீதான தடையை நீதிபதி நீக்குகிறார்.)இதுதாங்க உண்மையில் நடந்தது!!!

0 comments:

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...