'மல்லு' கத கேளுங்கய்யா..

>> Wednesday, 14 May 2008

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துக்காக பில் கேட்ஸ் ஒரு நேர்முகத் தேர்வு நடத்துனாராம். நேரடியான தேர்வுன்னு சொன்னதால ஒரே நேரத்துல 2000 பேரு வந்திருக்காங்க. கேட்ஸ் உடனே,"எல்லாரும் வந்திருக்கீங்க. சந்தோசம்.ஆனா, எனக்குத் தேவை எம் எஸ் சர்ட்டிஃபைட் ஆட்கள்"னு சொல்லியிருக்காரு. அந்தக் கூட்டத்துல நம்ம குட்டப்பனும் இருந்திருக்காரு. குட்டப்பனுக்கு அப்படின்னா என்னன்னு தெரியலை. சுத்திப் பார்த்திருக்காரு. வந்ததுல பாதி பேரு வெளிய போயிட்டு இருக்கானுங்க. இவரும் வெளில போலாமான்னு யோசிச்சிருக்காரு. அப்புறம் 'இருக்கட்டும் பார்த்துக்கலாம்'னு சும்மா அப்படியே உக்காந்துட்டாரு.இன்னும் 1000 பேரு இருக்குறதால 'கம்ப்யூட்டர்ல எம்.எஸ் படிச்ச்சவங்க மட்டும் இருங்க மத்தவங்க போலாம்'னு சொல்லிட்டாரு கேட்ஸ். குட்டப்பனுக்குத் தெரிஞ்சு டாக்டர்லதான் எம் எஸ் எல்லாம் இருக்காங்க. 'கம்ப்யூட்டர்லயுமா?'ன்னு ஒரே சந்தேகமாப் போச்சு. 'சரி பரவாயில்ல! காஸர்கோடுல எங்கயாவது சர்ட்டிபிக்கேட் அச்சடிச்சா போச்சு'ன்னு சும்மா இருந்துட்டான். மத்தவங்க எல்லாம் போயிட்டாங்க.ஆனாலும் 200 பேரு இருந்ததும் கேட்ஸ் கொஞ்சம் யோசிச்சுட்டு "கம்ப்யூட்டர்ல டாக்டரேட் வாங்கியிருந்திருக்கணும்'னு சொன்னாராம். குட்டப்பனுக்கு அது பெரிய விசயமாவே படலை. 'கேவலம் விஜயே வாங்கிட்டாரு டாக்டர் பட்டம். எனக்குக் கிடைக்காதா? ஜேப்பியார் கிட்ட பேசிக்கலாம்'ன்னு சிரிச்சுக்கிட்டே உள்ளே உக்காந்திட்டு இருந்திருக்கான்.ஆனா, டாக்டர்ன்னு கேட்டதும் குண்டு போட்ட மாதிரி கூட்டம் காணாமப் போயிடுச்சு. மிஞ்சுனது 10 பேருதான். கேட்ஸ் கொஞ்ச நேரம் 10 பேரையும் பார்த்துட்டு, "இப்ப எனக்கு சந்தோசமா இருக்கு. ரொம்பப் படிச்ச மேதாவிங்க் எல்லாம் இப்ப இங்க இருக்கீங்க. ஆனாலும் இந்த வேலை க்ரோஷியாலங்குறதால உங்கள்ல யாருக்கு க்ரோஷியன் மொழி தெரியுமோ அவங்க மட்டும் இருங்க. மத்தவங்க எல்லாம் போகலாம்'ன்னு சொல்லியிருக்காரு.குட்டப்பனுக்கு மலையாளமே குட்டநாடு வட்டார வழக்குதான் தெரியும். இதுல க்ரோஷியாவுக்கு என்ன செய்றது? அதுக்காகப் போயிட முடியுமா? அப்படியே அசட்டுச் சிரிப்போட உக்காந்திட்டிருக்கான்.இப்ப அநேகமா எல்லாரும் போயிட்டாங்க. குட்டப்பனையும் இன்னொரு ஆளையும் தவிரகேட்ஸ் ரொம்ப சந்தோசமாயிட்டாரு. "இப்ப நீங்க ரெண்டு பேருதான் இருக்கீங்க. ரெண்டு பேருக்குமே க்ரோஷியன் பாஷை தெரியும்கறதால நீங்க உங்களுக்குள்ளேயே பேசிக்குங்க"ன்னு சொன்னதும் குட்டப்பன் கொஞ்சமும் தயங்காம அந்த ஆளு கிட்ட, "எந்தா சுகமல்லே?" என்றான்"நீ போடா தெண்டி(பொறுக்கி) " என்று பதில் வந்தது மறுமுனையில் இருந்து
*************************************
நீதி:
எட்டப்பன்களைக் கூட நம்பலாம். குட்டப்பன்களை நம்ப முடியுமா???

0 comments:

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...